புதிய அரசாங்கத்தில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட கலாநிதி மதுர செனவிரத்ன நேற்று (22) காலை உயர்கல்வி அமைச்சில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹெவகே, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
The post கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன கடமைகளை பொறுப்பேற்றார் appeared first on Thinakaran.


