எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் வக்ஃப் வாரிய திருத்தம் உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 25 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முதல் வாரத்திற்குள், வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக்குழு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வழிவகை செய்யும் மசோதா உட்பட புதிதாக 5 மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இதையும் படிக்க:
அமெரிக்கா நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு… அதானி குழுமம் கொடுத்த விளக்கம்
அதே சமயம், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல்’’ தொடர்பான மசோதாக்களின் தொகுப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் பட்டியலிடப்படவில்லை.
இந்நிலையில், அதானி முறைகேடு தொடர்பாக, கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது நாடாளுமன்ற அவைகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)