இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
அமெரிக்கா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அதானி குழுமம், “குற்றம் நிரூபணம் ஆகும் வரை தாங்கள் நிரபராதிகள் என்று அமெரிக்கா நீதித்துறை சுட்டிக்காட்டி இருக்கிறது. எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
வெளிப்படைத்தன்மையுடன், விதிகளை எப்போதும் பின்பற்றி செயல்பட்டு வருகிறோம். நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் :
திமுக எம்பிக்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு! நாளை அறிவாலயத்தில் நடக்கும் கூட்டம்!
இதனிடையே, ஊழல் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்ட அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஊழல் மூலம் இந்தியாவில் அதானி சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
