“இது அடிப்படையற்ற குற்றசாட்டு’ என்று அதானி மீதான அமெரிக்காவின் ஊழல் குற்றச்சாட்டிற்கு அதானி நிறுவனம் பதிலளித்துள்ளது.
அதானி நிறுவனம் தனது அறிக்கையில், “அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற கமிஷன், அதானி குழுமத்தின் இயக்குநர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது அடிப்படையில்லாதது ஆகும். அந்தக் குற்றச்சாட்டை நாங்கள் மறுக்கிறோம்.
அமெரிக்க நீதித்துறை தங்களது குற்றச்சாட்டில் கூறியுள்ளதுபடி, இவை வெறும் குற்றச்சாட்டே மற்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாங்கள் நிரபராதிகள்தான்.
இந்தக் குற்றம் சம்பந்தமாக அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

