[ad_1]
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :நம் நாட்டில் பல்வேறு இடங்களில் சமீப காலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
இத்தகைய தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றிய பயங்கரவாத கும்பல்களின் தொடர்புகளை கண்டறியும் நோக்கில் தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபட முயற்சிக்கும் பயங்கரவாத கும்பல்களின் தொடர்புகள் இருப்பதாக என்.ஐ.ஏ.,விற்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மேற்கண்ட நான்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.முன்னதாக, பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் உட்கட்டமைப்பை கண்டறிந்து அழிக்கும் நோக்கில் அவற்றின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளையும் என்.ஐ.ஏ., மேற்கொண்டு வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement