• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

11 மணி நிலவரம் | மகாராஷ்டிரா-18.14%, ஜார்க்கண்ட் 2-ம் கட்டம்-31.37% வாக்குகள் பதிவு | Maharashtra-18.14%, Jharkhand Phase 2-31.37% voter registration

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
11 மணி நிலவரம் | மகாராஷ்டிரா-18.14%, ஜார்க்கண்ட் 2-ம் கட்டம்-31.37% வாக்குகள் பதிவு | Maharashtra-18.14%, Jharkhand Phase 2-31.37% voter registration
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 18.14% வாக்குகளும், ஜார்க்கண்ட்டில் 31.37% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மகாராஷ்டிரா கள நிலவரம்: மகாராஷ்டிராவில் கட்சிரோலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 30% வாக்குகளும், நான்டெட் தொகுதியில் குறைந்தபட்சமாக 13.67% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மும்பை மாநகரில் 15.78% வாக்குகளும், மும்பை புறநகரில் 17.99% வாக்குகளும், நாக்பூரில் 18.90% வாக்குகளும், தானே நகரில் 16.63% வாக்குகளும் பதிவாகி உள்ளன. அவுரங்காபாத் – 17.45%, புனே – 15.64%, நாசிக் – 18.71%, சத்தாரா – 18.72%, கோலாபூர் – 20.59%, துலே – 20.11, பால்கர் – 19.40%, ரத்னகிரி – 22.93%, லட்டூர் – 18.55% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மகாராஷ்டிரா தேர்தல் களம்: மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. இந்த சூழலில் மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகுிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 158 கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தானே மாவட்டம் கோப்ரி-பச்பகாடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே போட்டியிடுகிறார். துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு-மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மும்பை வோர்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த மிலிந்த் தியோரா போட்டியிடுகிறார். இவர் கடந்த ஜனவரியில் காங்கிரஸில் இருந்து விலகி ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஜார்க்கண்ட் தேர்தல் களம்: ஜார்க்கண்ட் மாநிலத்​தில் இன்று 2-ம் கட்ட சட்டப்​பேர​வைத் தேர்தலூக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நேர நிலவரப்படி 31.37% வாக்குகள் பதிவாகி உள்ளன. இன்று அந்த மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் 81 சட்டப்​பேர​வைத் தொகு​திகள் உள்ளன. கடந்த 13-ம் தேதி முதல்​கட்​டமாக 43 தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இதில், 66.65% வாக்குகள் பதிவாகியது. இரண்​டாம் கட்டமாக இன்று 38 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற்று வருகிறது. இந்த தொகு​தி​களில் மொத்தம் 1.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 528 வேட்பாளர்கள் களத்​தில் உள்ளனர்.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்​ட​ணிக்​கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நிலவு​கிறது.

ஜார்க்​கண்ட் சட்டப்​பேர​வைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 48 சட்டப்​பேர​வைத் தொகு​தி​கள், வயநாடு, நான்டெட் மக்​கள​வைத் தொகு​தி​களின் இடைத்​தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை​யும் வரும் 23-ம் தேதி நடைபெறுகிறது.



Read More

Previous Post

மன்னார் தாய் மற்றும் சிசு மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

Next Post

இந்த போட்டோவில் உள்ளது யார் தெரிகிறதா? தமிழில் பிரபல நடிகை தான்!

Next Post
இந்த போட்டோவில் உள்ளது யார் தெரிகிறதா? தமிழில் பிரபல நடிகை தான்!

இந்த போட்டோவில் உள்ளது யார் தெரிகிறதா? தமிழில் பிரபல நடிகை தான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin