• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்: குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும் | ISRO satellite launch by SpaceX rocket

GenevaTimes by GenevaTimes
November 20, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இஸ்ரோ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தம்: குக்கிராமங்களுக்கும் இணைய வசதி கிடைக்கும் | ISRO satellite launch by SpaceX rocket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் ஜிசாட் என்-2 செயற்​கைக்​கோள் நேற்று விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது.

இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனமான இஸ்ரோ, நூற்றுக்​கணக்கான செயற்​கைக்​கோள்களை வெற்றிகரமாக விண்​ணில்நிலை நிறுத்தி உள்ளது. உள்நாடு மட்டுமின்றி சுமார் 34 நாடு​களின் 424 செயற்​கைக்​கோள்​களை​யும் இஸ்ரோ விண்​ணில் செலுத்தி உள்ளது.

இந்த சூழலில் இந்தியா​வின் தகவல் தொடர்​புக்காக இஸ்ரோ சார்​பில் ஜிசாட் என்-2 என்ற செயற்​கைக்​கோள் தயாரிக்​கப்​பட்​டது. இது 4,700 கிலோ எடை கொண்​ட​தாகும். இந்த செயற்​கைக்​ கோளை இஸ்ரோ​வின் எல்விஎம்3 ராக்​கெட் மூலம் ஹரி​கோட்​டா​வில் இருந்து விண்​ணில் செலுத்த திட்​ட​மிடப்​பட்டு இருந்​தது. ஆனால் எல்விஎம் 3 ராக்​கெட் மூலம் 4,000 கிலோ எடை கொண்ட செயற்​கைக்​கோள்களை மட்டுமே சுமந்து செல்ல முடி​யும். எனவே 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் என்-2 செயற்​கைக்​கோளை விண்​ணில் செலுத்த பிரான்​ஸின் ஏரியன் ஸ்பேஸ் நிறு​வனத்தை இஸ்ரோ அணுகியது.

பிரான்ஸ் நிறு​வனத்​தில் ஏற்கெனவே முன்​ப​திவுகள் அதிகம் இருந்​த​தால் நீண்ட காலம் காத்​திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்​டது. இதைத் தொடர்ந்து அமெரிக்​கா​வின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்தை இஸ்ரோ அணுகியது. இதன்படி அந்த நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் என்-2 செயற்​கைக்​கோள், அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், கேப் கேனரவல் தளத்​தில் இருந்து நேற்று அதிகாலை விண்​ணில் வெற்றிகரமாக ஏவப்​பட்​டது. இதற்காக இஸ்ரோ சார்​பில் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​துக்கு ரூ.500 கோடி கட்டணம் செலுத்​தப்​பட்​டது.

புதிய செயற்​கைக்​கோள் மூலம் இந்தியா​வின் குக்​கிராமங்​களுக்​கும் இணைய வசதியை வழங்க முடி​யும். குறிப்பாக அந்த​மான்​-நிக்கோபர் தீவு​கள், ஜம்மு-​காஷ்மீர் மலைப் பகுதி​கள், லட்சத்தீவு, வடகிழக்கு மாநிலங்​களின் மலைப்​பகு​தி​களில் இணைய வசதியை வழங்க முடி​யும். விமான பயணி​களும் எளிதாக இணைய சேவையை பயன்​படுத்த முடி​யும்.

மத்திய விண்​வெளித் துறை​யின் கீழ் செயல்​படும் நியூஸ்​பேஸ் இண்டியா லிமிடெட் (என்​எஸ்​ஐஎல்), ஜிசாட் என்-2 செயற்​கைக்​கோளை இயக்க உள்ளது. அந்த அமைப்பு சமூக வலைதளத்​தில் வெளி​யிட்ட பதிவில், “சுமார் 14 ஆண்டுகள் செயற்​கைக்​கோள் பயன்​பாட்​டில் இருக்​கும். இதன்​மூலம் இந்தியா​வின் தொலைதூர பகுதி​களுக்கும் இணைய வசதி வழங்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்டு உள்ளது. இஸ்ரோ முன்​னாள் தலைவர் மாதவன் நாயர் கூறிய​தாவது: இப்போதைய நிலை​யில் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மூலம் இஸ்​ரோ​வின் ஜிசாட் என்-2 செயற்​கைக்​கோளை ​விண்​ணில் செலுத்தி உள்​ளோம். வரும் ​காலத்​தில் அதிக எடை ​கொண்ட செயற்​கைக்​கோள்களை இஸ்​ரோவே ​விண்​ணில் செலுத்​தும். இவ்​வாறு ​மாதவன் நாயர்​ தெரி​வித்​தார்​.



Read More

Previous Post

தோல்வியடைந்த MPக்கள் மாதி​ெவல வீடுகளிலிருந்து வெளியேறல்

Next Post

டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? – கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு | money not reason Rishabh Pant to Gavaskar on delhi capitals retention

Next Post
டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? – கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு | money not reason Rishabh Pant to Gavaskar on delhi capitals retention

டெல்லி கேபிடல்ஸ் அணி பணத்துக்காக என்னை தக்கவைக்கவில்லையா? - கவாஸ்கர் கருத்துக்கு ரிஷப் பந்த் மறுப்பு | money not reason Rishabh Pant to Gavaskar on delhi capitals retention

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin