குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதுகலத்தை ஏற்படுத்தும் தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் மக்கள் மும்முரமாக ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வார இறுதி நாட்கள் என்பதால் இன்று திருநெல்வேலியில் கடைவீதிகளில் கூட்டம் களைகட்டியது. ஷாப்பிங் செய்வதற்காக வரும் பொதுமக்கள் டீ, காபி, கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றைப் பருகி தங்களை ரீசார்ஜ் செய்து செய்து கொள்கின்றனர். பூக்கடையிலும் கூட்டம் காணப்படுகிறது. மழை வர வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னேற்பாடாகக் குடைகளுடனே கடைவீதிக்கு வந்துள்ளனர்.
குறிப்பாகக் கைக்குழந்தைகளுடன் பொதுமக்கள் தீபாவளியைக் கொண்டாடுவதற்குப் பொருட்கள் வாங்க டவுன் வடக்கு ரத வீதிக்கு வந்திருந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் தற்போது பர்சேஸ் செய்வதற்குக் கூட்டம் குறைவாகத் தான் உள்ளது என ஆட்டோ ஓட்டுநர் சங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாயும் குதிரையில் வீரமாக ராணி மங்கம்மாள்… திருச்சியில் இதை கவனிச்சு இருக்கீங்களா…
இது குறித்து அவர் கூறுகையில், “பொதுமக்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டுகளை எடுக்க திருநெல்வேலி டவுன் வடக்கு ரத வீதிக்கு வருவார்கள். இதுதான் பெரிய அளவிலான தெருவாகும். திருநெல்வேலி மாவட்டத்திலேயே இவ்வளவு கடைகள் உள்ள தெரு வேறு எங்கும் கிடையாது.
இங்கு 150-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. பண்டிகைக் காலம் தொடங்கி உள்ளதால் ஜவுளிக் கடைகளில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. சாலையோரக் கடைகளிலும் குறைந்த விலைகளில் துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன. குறைந்தது 100 ரூபாய் முதல் ஆயிரக்கணக்கில் துணிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல் செருப்பு, கம்மல் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. டவுன் வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி உள்ளிட்ட நான்கு ரத வீதிகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் கூட்டம் வர அதிக வாய்ப்பு உள்ளது. போன வருடம் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏனென்றால் தீபாவளி மாதக் கடைசிக்கு முன்பாக வந்தது. இந்த முறை தீபாவளி பண்டிகை மாதக் கடைசியில் வருகிறது. எனவே மக்களிடம் பணம் இல்லாததால் கூட்டம் கொஞ்சம் குறைவாக உள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்குப் பிரத்தியேகமான பிங்க் பூங்கா… என்னென்ன வசதி இருக்கு தெரியுமா…?
அதுமட்டுமல்லாமல் மழை பெய்து வருவதாலும் கூட்டம் சற்று குறைந்துள்ளது. மழை பெய்யாமல் இருந்தால் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் கூட்டம் குறைவாகவே இருக்கும். பொது மக்களின் பாதுகாப்பிற்காக மாநகரக் காவல் துறை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
