குட்டி சுட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரவேற்கக் காத்திருக்கும் தீபாவளி பண்டிக்கான நாட்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தீபாவளிக்கான புத்தாடைகள், காலணிகள், பலகாரங்கள் என பலவகைப் பொருட்களையும் பர்சேஸ் செய்வதற்காக மக்கள் மார்க்கெட்டுகளில் பரபரப்பாக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் திருச்சி மக்களின் முக்கியமான ஷாப்பிங் ஸ்பாட் ஆன திருச்சி என்.எஸ்.பி ரோடு மார்க்கெட்டில், விடுமுறை நாளான இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்கான ஆடை, அணிகலன் வாங்குவதற்காக மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
மார்க்கெட்டின் இரு ஓரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் குழந்தைகள் முதல் பெரியவர் என அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பலவகை உடைகளும், காலணி ரகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. பெண்களுக்கு ஹேண்ட் பேக்குகள், பேன்சி ஸ்டோர் போன்ற கடைகளில் வியாபாரம் களைகட்டியது.
இதையும் படிங்க: மன்னருக்கும் இது தான் பேவரைட்… மேல்புறம் முறுக்கின் சிறப்பு தெரியுமா…
பண்டிகைக்கு நாட்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் பகலில் சுட்டெரித்த சூரியனையும் மக்கள் பொருட்படுத்தாமல், பொறுமையாகத் தங்களுக்குத் தேவையான ஆடை உள்ளிட்ட பொருட்களைப் பார்த்துப் பார்த்து வாங்கினர். வார நாட்களிலேயே ஏராளமான மக்கள் என்.எஸ்.பி ரோட்டில் ஷாப்பிங் செய்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான மக்கள் குடும்பத்துடன் பர்சேஸ் செய்ததைக் காண முடிந்தது.
இந்த என்.எஸ்.பி மார்க்கெட்டி உள்ள கடைகளில் தீபாவளி பண்டிகைக்காகப் பல தள்ளுபடிகளும், பரிசுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. மேலும் சாலையோர வியாபாரிகளும் குறைந்த விலையில் மக்களுக்குத் தேவையான பல பொருட்களை விற்பனை செய்தனர்.
மேலும், குழந்தைகளைக் கவர வண்ண வண்ணக் காற்றாடிகள், பஞ்சு மிட்டாய் கடைகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான கடைகளில் பல விதமான ஆடை ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் எதை வாங்குவது எதை விடுவது என குழம்பிக் கடை வீதியில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி பர்சேஸ் செய்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)