• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அணு ஆயுதத்தில் ரஷ்யா முக்கிய முடிவு! தாக்குதலைத் துவங்கிய உக்ரைன்!

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அணு ஆயுதத்தில் ரஷ்யா முக்கிய முடிவு! தாக்குதலைத் துவங்கிய உக்ரைன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா – உக்ரைன் போர் 1000வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தனது நாட்டின் அணு ஆயுதக் கொள்கையில் மிக முக்கியமான திருத்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கையெழுத்திட்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர் ஏன்?

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காகக் கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா, அந்த நாட்டின் மீது தாக்குதலைத் துவங்கியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்திவருகிறது.

விளம்பரம்

உக்ரைனின் இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை உக்ரைனின் இந்தத் தாக்குதல்களுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்துவருகின்றன. இதனைக் கொண்டு உக்ரைன் தொடர்ந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்திவருகிறது.

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கிய அமெரிக்கா போட்ட உத்தரவு:

உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியது. அதேசமயம், அந்த ஆயுதங்களை ரஷ்யத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தது. அதேபோல், உக்ரைனும் பயன்படுத்திவந்தது. ஒரு கட்டத்திற்கு மேல், ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வேண்டும் என உக்ரைன் அமெரிக்காவிடம் வலியுறுத்திவந்தது.

விளம்பரம்

அமெரிக்க அதிபர் தேர்தல்:

ரஷ்யா – உக்ரைன் போர் ஒரு பக்கம் நடந்துவரும் வேளையில், அமெரிக்க அதிபர் தேர்தலும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் வென்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரியில் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பேசிய டிரம்ப், ‘‘போர்களை நான் தொடங்கவில்லை’’ என்றும், அதே நேரம் ‘‘போர்களை நிறுத்த முயற்சி எடுப்பேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாகப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது. ஐரோப்பிய கண்டத்தில் அமைதியை நிலை நிறுத்த இருதரப்பினரும் பேசியதாகவும், உக்ரைன் மீதான போரை விரைவில் நிறுத்த டிரம்ப் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

அனுமதி வழங்கிய அமெரிக்கா:

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும், வரும் ஜனவரி மாதம் அவர் பதவி ஏற்கும் வரை அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனே செயல்படுவார். இந்நிலையில், நீண்ட தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை உபயோகிக்க அனுமதி கேட்டுவந்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், உக்ரைனால் ரஷ்யாவின் உட்பகுதிவரை சென்று தாக்குதல் நடத்த முடியும்.

புதின் போட்ட உத்தரவு:

நீண்ட தூர ஏவுகணைகளை உபயோகிக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியதை அடுத்து, ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கையில் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அந்தத் திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

விளம்பரம்
கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய 5 சரும பராமரிப்பு குறிப்புகள்.!


கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய 5 சரும பராமரிப்பு குறிப்புகள்.!

அதன்படி, அணு ஆயுதம் இல்லாத நாட்டிற்கு, அணு ஆயுதம் வைத்துள்ள நாடு ஆதரவளித்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அந்த நாட்டின் மீது அணு ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், உக்ரைன் மீது அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம் என ரஷ்யா வெளிப்படையாக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ட்ரோன் தாக்குதலில் ஈடுபடும் நாடுகள் மீதும் அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் என ரஷ்யாவின் அணு ஆயுதக் கொள்கையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விளம்பரம்

தாக்குதலைத் துவங்கிய உக்ரைன்:

அமெரிக்கா அனுமதி வழங்கியதை அடுத்து, நீண்ட தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதலைத் துவங்கியுள்ளது. அதேபோல், அணு ஆயுதப் பயன்பாட்டிற்கு ரஷ்யா ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது உக்ரைன் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவும் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

.

Read More

Previous Post

ரூ.120 கோடி நன்கொடை வழங்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரபலம்… யார் தெரியுமா?

Next Post

இதைத் தீர்க்க வேண்டிய நேரம் இது – பிகேஆர் எம்.பி – Malaysiakini

Next Post
இதைத் தீர்க்க வேண்டிய நேரம் இது – பிகேஆர் எம்.பி – Malaysiakini

இதைத் தீர்க்க வேண்டிய நேரம் இது – பிகேஆர் எம்.பி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin