ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி தீவிர உடல்நலப் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே ஜனசேனா கட்சியைத் துவங்கி தீவிர அரசியலில் களமாடி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபுடன் இணைந்து போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் ஜனசேனா வெற்றியைப் பெற தற்போது துணை முதல்வராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
பவன் கல்யாண் இதுவரை 3 திருமணம் செய்துள்ளார். முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்த பவன் தற்போது மூன்றாவது மனைவி அன்னா லெஷ்னேவா உடன் வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே, பவனின் முன்னாள் மனைவியான ரேணு தேசாய் சமீபத்திய இன்ஸ்டா பதிவு ரசிகர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. ரேணு தேசாய், தான் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வீடியோவைப் பகிர்ந்து, “நவீன மருந்துகள் உடலை உயிருடன் வைத்திருக்கின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரேணு தேசாய் கடந்த ஆண்டு முதல் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறார். வேறு சில உடல்நலப் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை சமீபத்தில் வெளிப்படுத்திய ரேணு தேசாய், “சில ஆண்டுகளாக நான் இதயம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் தவித்து வருகிறேன். எனக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் இது தெரியும்.
எதுவாக இருந்தாலும் நாம் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் மீதும் வாழ்க்கையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்த பிரபஞ்சம் நமக்காக அதன் இனிமையான திட்டங்களைக் கொண்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.
2009ல் திருமணம் செய்து கொண்ட ரேணு தேசாய் மற்றும் பவன் கல்யாண் தம்பதியருக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 2012 இல் விவாகரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
