மொபிக்விக்கில் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ₹1,000 முதல் முதலீடு செய்து, அதிகபட்சமாக 9.5% வரை ஆண்டு வட்டி பெறலாம்.
மொபிக்விக்கில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் மூலம் பயனர்கள் புதிய வங்கிக் கணக்கைத் திறக்காமலேயே முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிரந்திர வைப்புத்தொகையில் 7 நாட்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான கால அவகாசத்தை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
மகிந்திரா ஃபைனான்ஸ், ஸ்ரிராம் ஃபைனான்ஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து மொபிக்விக்க இந்த திட்டத்தை வழங்குகிறது.
இதையும் படிக்க:
இனி ரூ.10 லட்சம் இல்ல ரூ.20 லட்சம்… மத்திய அரசு சொன்ன இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி
மொபிக்விக்கின் இணை நிறுவனர் மற்றும் CEO பிபின் பிரீத் சிங், “ஃபிக்ஸட் டெபாசிட் என்பது இந்தியர்கள் தங்கள் சேமிப்பைப் பாதுகாக்க விரும்புவதற்கான ஒரு விரும்பத்தக்க தேர்வாகும். எங்கள் FD தயாரிப்பு இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு, குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
ஃபிக்ஸட் டெபாசிட்டின் நன்மைகள்:
புதிய வங்கிக் கணக்கு தேவையில்லை: புதிய வங்கிக் கணக்கைத் திறக்காமல் முதலீடு செய்யலாம்.
உயர் வட்டி விகிதம்: 9.5% வரை அதிக வட்டி விகிதம் கிடைக்கும்.
கால அவகாசத்தை தேர்வு செய்யலாம்: 7 நாட்கள் முதல் 60 மாதங்கள் வரை கால அவகாசத்தை தேர்வு செய்யலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
