மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் சங்மா அறிவித்துள்ளார்.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், பாஜக தேசிய செயலாளர் ஜெ.பி.நட்டாவுக்கு சங்மா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நெருக்கடியை தவிர்க்கவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கவும் பிரேன் சிங் ஆட்சி முழுமையாக தவறிவிட்டது. முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குறிப்பிட்டு, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Also Read:
மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்… ஊரடங்கு அமல் – அமித்ஷா அவசர ஆலோசனை!
ஆதரவை திரும்பப் பெற்ற தேசிய மக்கள் கட்சி
மேலும், மாநிலத்தில் உள்ள மக்கள், பெரும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையை மனதில் கொண்டு தேசிய மக்கள் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உடனடியாக திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில், தேசிய மக்கள் கட்சிக்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
பாதிப்பு இல்லை
பாஜக மட்டும் 32 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளதால், தேசிய மக்கள் கட்சி தங்களது ஆதரவை திரும்பப் பெற்றாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
