• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘கங்குவா’ படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் – ஜோதிகா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘கங்குவா’ படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் – ஜோதிகா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா கூட்டணியில் உருவான கங்குவா திரைப்படம் நவம்பர் 14 அன்று வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இத்திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.இதனிடையே இத்திரைப்படம் உலகம் முழுவதும் முதல் 2 நாட்களில் ரூ. 89.32 கோடி வசூல் செய்துள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “கங்குவா மிகச்சிறந்த படம். நான் இதை சூர்யாவின் மனைவியாக கூறவில்லை. சினிமா ரசிகையாக சொல்கிறேன். ஒரு நடிகராக சினிமாவை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என நினைக்கும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் சூர்யா. இந்திய சினிமாக்களில் தவறுகள் என்பது ஒரு பகுதிதான். 3 மணி நேர படத்தில் அரை மணி நேரம் மட்டுமே குறை உள்ளது. இப்படத்தின் சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முழுமையான சினிமா அனுபவத்தை கொடுக்கும் படம் இது.

பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் என அறிவுக்கு மாறாக எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்களுக்கு இந்த அளவிற்கு விமர்சனங்கள் வரவில்லை.ஊடகங்களில் வெளியான எதிர்மறையான விமர்சனங்கள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இப்படம் சிறந்த ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டுள்ளது. கங்குவா படத்தின் 2ம் பாதியில் பெண்களின் ஆக்ஷன் காட்சியையும், கங்குவாவுக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பு, துரோகம் போன்ற நல்ல காட்சிகள் உள்ளது. படத்தை ரிவ்யூ செய்வதில் அவர்கள் நல்ல விஷயங்களை சொல்ல மறந்துவிட்டனர்.

இப்படத்தை 3டியில் உருவாக்க படக்குழு எடுத்த முயற்சிக்கு பாராட்டு கிடைக்க வேண்டிய நிலையில், படத்தின் முதல் ஷோ முடிவதற்கு முன்பே கங்குவா படத்திற்கு இவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தது வருத்தமளிக்கிறது.கங்குவா படக்குழு பெருமையாக இருங்கள். இப்படத்திற்கு எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேறு எதுவும் செய்யவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.



Read More

Previous Post

பாகிஸ்தானில் காற்று மாசு உச்சம்: ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதி | Air pollution in Pakistan 19 lakh people hospitalized in a month

Next Post

எலிசபெத் ராணிக்கு பின் நைஜீரியாவில் மோடிக்கு வழங்கப்பட்ட கௌரவம்

Next Post
எலிசபெத் ராணிக்கு பின் நைஜீரியாவில் மோடிக்கு வழங்கப்பட்ட கௌரவம்

எலிசபெத் ராணிக்கு பின் நைஜீரியாவில் மோடிக்கு வழங்கப்பட்ட கௌரவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin