கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ள டுவைன் ப்ராவோ, கேகேஆர் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக தனது பேட்டிங் மற்றும் பந்துவீச்சால் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் டுவைன் ப்ராவோ. மிடில் ஆர்டர் பேட்டிங், கட்டுக்கோப்பு மற்றும் சமயோஜிதமான பந்துவீச்சால் தான் இடம்பெற்ற அணிகளுக்கு பல முறை வெற்றிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு வீரராக அவரது சுமார் 20 ஆண்டு கால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. எனினும் கிரிக்கெட் உடனான தனது உறவை அவர் முழுதாகவும் முறித்துக்கொள்ளவில்லை. வீரராக ஓய்வுபெற்றாலும் ஆலோசகராக தனது பணியைத் தொடரவுள்ள அவர் ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் ஆலோசகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தீரன் பட பாணியில் சேசிங்.. மேவாட் கொள்ளையர்கள் தமிழ்நாட்டில் சிக்கியது எப்படி?
சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் இம்முறை கேகேஆர் அணி பக்கம் அவர் சென்றுள்ளார்.கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகியுள்ள நிலையில், அந்த இடத்தை தற்போது நிரப்பியுள்ளார் பிராவோ!
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
