• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

`டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி டெல்லியில் ஓய்வுபெற்ற இன்ஜினீயரிடம் ரூ.10 கோடி அபகரிப்பு | 70-year-old retired Delhi engineer duped of Rs 10 crore in digital arrest scam

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
`டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாக மிரட்டி டெல்லியில் ஓய்வுபெற்ற இன்ஜினீயரிடம் ரூ.10 கோடி அபகரிப்பு | 70-year-old retired Delhi engineer duped of Rs 10 crore in digital arrest scam
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அண்மையில் அவரது செல்போனில் ஓர் அழைப்பு வந்துள்ளது. வீடியோ காலில் பேசிய மர்மநபர், “தைவானில் இருந்து உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் பார்சல் சிக்கி உள்ளது.

போதைபொருள் கடத்தல்வழக்கில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்” என்று மிரட்டினார். மர்ம நபரின் மிரட்டலால் அச்சமடைந்த முதியவர், “நான் எந்த குற்றமும் செய்யவில்லை. என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்று மன்றாடினார்.

எதிர்முனையில் பேசிய மர்ம நபர், முதியவரின் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். பின்னர் வழக்கில் இருந்து விடுவிக்க அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் ரூ.10.3 கோடியை குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றக் கோரி உள்ளார். இதை நம்பிய முதியவர் தனது ரூ.10.3 கோடியை மர்ம நபர் கூறிய வங்கிக்கணக்குகளுக்கு மாற்றி உள்ளார்.

முதியவரின் மகன் துபாயில் வசிக்கிறார். அவரது மகள் சிங்கப்பூரில் உள்ளார். இதை அறிந்து கொண்ட மர்ம நபர், மகன், மகளிடம் இருந்து சில கோடிகளை வாங்கி தனது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்புமாறு கோரி உள்ளார். இதையும் நம்பிய முதியவர் தனது மகன், மகளை தொலைபேசியில் அழைத்து பணம் கோரியுள்ளார்.

தந்தை ஏமாற்றப்பட்டிருந்தை அறிந்த மகன், உடனடியாக டெல்லி சைபர் கிரைம் போலீஸில் தொலைபேசி வாயிலாக புகார் அளித்தார். உடனடியாக சைபர் கிரைம் போலீஸார் விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கம்போடியா நாட்டை சேர்ந்த மர்ம கும்பல், முதியவரை வீடியோகாலில் தொடர்பு கொண்டுபோதை பொருள் கடத்தல் வழக்கில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாக கூறி மிரட்டி உள்ளது.

இந்த வழக்கில் அவரது மகன்,மகளையும் சேர்க்கப்போவதாகவும் அச்சறுத்தி உள்ளனர். இதை நம்பிய முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10.3 கோடியை மர்ம கும்பலின் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி உள்ளார். இதில் ரூ.60 லட்சத்தை மட்டுமே உடனடியாக மீட்க முடிந்தது. மீதமுள்ள பணத்தை மீட்க அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.



Read More

Previous Post

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை – எம்.ஏ.சுமந்திரன்

Next Post

தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் – ரித்திகா தம்பதி! | Rohit Sharma Ritika Sajdeh blessed with baby boy

Next Post
தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் – ரித்திகா தம்பதி! | Rohit Sharma Ritika Sajdeh blessed with baby boy

தங்களது 2-வது குழந்தையை வரவேற்றுள்ளனர் ரோஹித் - ரித்திகா தம்பதி! | Rohit Sharma Ritika Sajdeh blessed with baby boy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin