கிழக்கு லடாக்கை ஒட்டிய எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து இந்திய – சீனப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அப்பகுதியில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி தீபாவளி கொண்டாடினர்.
2020ஆம் ஆண்டு எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து எல்லையில் இரு நாடுகளும் வீரர்களை குவித்ததால் பதற்றம் நீடித்து வந்தது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் சர்ச்சைக்குரிய பல இடங்களில இருந்து படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டபோதும் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் தொடர்ந்து தங்கியிருந்தனர்.
இந்நிலையில் அந்த இரு பகுதிகளில் இருந்தும் படைகளை விலக்க கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடி – சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர். இந்த சூழலில் அந்த இரு பகுதிகளில் இருந்தும் இரு நாட்டு வீரர்கள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், வீரர்களின் ரோந்துப் பணி தொடங்கியுள்ளது.
முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு இரு நாட்டு வீரர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளியை ஒட்டி Chushul-Moldo எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
