• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அங்கீகாரத்துக்காக ஏங்கும் 63% இந்திய ஊழியர்கள் – புதிய சர்வே சொல்வது என்ன? | 63% of Indian Employees wants Recognition Say New Survey 

GenevaTimes by GenevaTimes
November 15, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
அங்கீகாரத்துக்காக ஏங்கும் 63% இந்திய ஊழியர்கள் – புதிய சர்வே சொல்வது என்ன? | 63% of Indian Employees wants Recognition Say New Survey 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லிள்ள இந்திய ஊழியர்களில் 63 சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான ‘இன்’டீட்’ இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளம் இந்தியாவின் பணிச்சூழல் குறித்து கருத்துக் கணிப்பு நடத்தி விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கருத்துகளை கேட்டறிந்தோம். 30 சதவீத உரிமையாளர்கள், 70 சதவீத ஊழியர்கள் என்ற வகையில் கருத்துக் கணிப்பை நடத்தினோம். எங்களது கருத்துக் கணிப்பின்படி இந்திய ஊழியர்களில் 63 சதவீதம் பேர் அங்கீகாரத்துக்காக ஏங்குகின்றனர். குறிப்பாக, மூத்த அதிகாரிகள் தங்களது திறமையை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

சுமார் 48 சதவீத இந்திய ஊழியர்கள் தங்கள் நிறுவனம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். மீதமுள்ளோர் நிறுவனத்தின் மீது ஏதோ ஒரு வகையில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். பணியிடத்தில் சுமார் 12 சதவீத பெண் ஊழியர்கள் பாலின வேறுபாட்டை எதிர்கொள்வதாக புகார் தெரிவித்து உள்ளனர். ஆண் ஊழியர்களை பொறுத்தவரை இது 9 சதவீதமாக உள்ளது.

ஊழியர்களை போன்று நிறுவன உரிமையாளர்களிடமும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. சுமார் 47 சதவீத உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். சுமார் 36 சதவீத உரிமையாளர்கள், தங்கள் ஊழியர்கள் மீது சில விவகாரங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் சில கருத்துகளை முன்வைக்கிறோம். பணியிடங்களில் ஊழியர்களுக்கு உகந்த சூழலை உரிமையாளர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ஊழியர்களை மதிக்க வேண்டும். அவர்கள் தங்கள் முழுத்திறனை வெளிப்படுத்த ஊக்கம் அளிக்க வேண்டும். ஊழியர்கள், உரிமையாளர்கள் இடையே இடைவெளி இருக்கக்கூடாது. இருதரப்புக்கும் இடையே வலுவான பிணைப்பு இருக்க வேண்டும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



Read More

Previous Post

மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து! | England won t20 series against West Indies

Next Post

அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் | After presidential election Diwali celebration in United States took off

Next Post
அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் | After presidential election Diwali celebration in United States took off

அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் | After presidential election Diwali celebration in United States took off

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin