• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரதமர் மோடி செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 15, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரதமர் மோடி செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



November 15, 2024, 6:48 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை

November 15, 2024, 3:59 pm IST

Tamil Live Breaking News : பிரதமர் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

ஜார்கண்டில் பிரதமர் மோடி செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பரப்புரைக்கு சென்ற நிலையில் தியோகர் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த பிரதமர் ஜார்கண்டிலிருந்து டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

November 15, 2024, 11:57 am IST

Tamil Live Breaking News : எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது – ரகுபதி

நடிகர் விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்றப் பார்க்கிறார். அது ஒருபோதும் நடக்காது. எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்துப் போகும் என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

விளம்பரம்
November 15, 2024, 11:39 am IST

Tamil Live Breaking News : சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை – ரகுபதி

சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை. அப்படி யாரேனும் சொன்னால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி.

November 15, 2024, 11:37 am IST

Tamil Live Breaking News : “விக்னேஷ்க்கு முறையாக சிகிச்சை தரப்பட்டது”

விக்னேஷ்க்கு முறையான சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது என கிண்டி அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தொடர முடியாத நிலையில், நோய் தீவிரத்துடன் விக்னேஷ் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டார். அவரை அழைத்து வந்தபோது உள்நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இருந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை தரப்பட்ட நிலையில் மரணம் என மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

November 15, 2024, 11:35 am IST

Tamil Live Breaking News : கிண்டி மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு – உறவினர்கள் வாக்குவாதம்

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததை அடுத்து உறவினர்கள் வாக்குவாதம்.
பித்தப்பை கல் பிரச்னையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரும்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் உயிரிழந்தார். மருத்துவர்கள் இல்லாததே விக்னேஷ் உயிரிழப்புக்கு காரணமெனக் கூறி உறவினர்கள் வாக்குவாதம்.

விளம்பரம்
November 15, 2024, 11:34 am IST

Tamil Live Breaking News : என்எல்சி – முதல் அனல் மின் நிலையம் இடித்து அகற்றம்

என்எல்சி நிறுவனத்தின் முதல் அனல் மின் நிலையத்தை இடித்து அகற்றும் பணி தொடக்கம்.

1962ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அனல் மின் நிலையத்தில் 2020ஆம் ஆண்டோடு உற்பத்தி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

November 15, 2024, 10:34 am IST

Tamil Live Breaking News : சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த தாயிடம் இருந்து கடத்தப்பட்ட 45 நாள் குழந்தை திருவேற்காடு அருகே மீட்கப்பட்டுள்ளது.

அரசுத்திட்டங்கள் வாங்கித்தருவதாக கூறி குழந்தையுடன் தாய் நிஷாந்தியை தியாகராய நகருக்கு அழைத்து வந்து, நிஷாந்தியை கடைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை கடத்தியுள்ளனர். கடத்திய பெண்ணை தற்போது போலீசார் தேடு வருகிறார்கள்.

November 15, 2024, 10:31 am IST

Tamil Live Breaking News : கோவையில் 2வது நாளாக சோதனை

கோவை, துடியலூரில் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின் இல்லம், அலுவலகத்தில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.

மார்ட்டினின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புடன் சோதனை.

விளம்பரம்
November 15, 2024, 10:30 am IST

Tamil Live Breaking News : இலங்கை தேர்தல் – ஆளும் கட்சி முன்னிலை

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அனுரகுமாரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 70% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது.

தற்போதுவரை 47 தொகுதிகளில் இதுவரை தேசிய மக்கள் சக்தி கூட்டணி 35 இடங்களில் முன்னிலையும், சஜித் பிரேமதாஸாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை பொதுஜன பெரமுனா 2 இடங்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

November 15, 2024, 7:20 am IST

Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை

சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி அரியலூர் திருச்சி தென்காசி சிவகங்கை புதுக்கோட்டை ராமநாதபுரம் தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

November 15, 2024, 6:48 am IST

Tamil Live Breaking News : 7 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விளம்பரம்
November 15, 2024, 6:43 am IST

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.

  • First Published : November 15, 2024, 6:42 am IST

Read More

Previous Post

தேசியப் பட்டியல் ஆசனத்தை ஏற்கமாட்டேன் – சுமந்திரன் அதிரடி!! ஆனால்…

Next Post

ஒருநாள் போட்டியைப் போல் ரன்கள் குவித்த இந்திய அணி… கடைசி நாள் போட்டியில் வெற்றி பெறுமா?

Next Post
ஒருநாள் போட்டியைப் போல் ரன்கள் குவித்த இந்திய அணி… கடைசி நாள் போட்டியில் வெற்றி பெறுமா?

ஒருநாள் போட்டியைப் போல் ரன்கள் குவித்த இந்திய அணி… கடைசி நாள் போட்டியில் வெற்றி பெறுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin