நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சுமந்திரனுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படலாம் என்று பரவலாகப் பேசப்பட்டுவந்த நிலையில், தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் நடாளுமன்றம் செல்லமாட்டேன் என்று தற்பொழுது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தமிழரசுக் கட்சியின் (Ilankai Tamil Arasu Kachchi) மத்திய குழுவின் தீர்மாணத்திற்குக் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் (15.11.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவின் முடிவு
மக்களால் தெரிவு செய்யபட்டால் மாத்திரமே தான் நாடாளுமன்றம் செல்வேன் என்றும், கட்சியின் மத்தியகுழுவே தேசியப் பட்டியல் ஆசனத்தை தீர்மானிக்கும்
என்றும் கூறிய சுமந்திரனிடம், ‘ஒருவேளை மத்திய குழு தேசியப் பட்டியலுக்காக உங்களைத் தெரிவு செய்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுவின் முடிவுக்கு முழுமையாகக் கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
யாழ்பாணத்திலும், வன்னியிலும் தமிழரசுக் கட்சியின் தோல்வியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த சுமந்திரன், தனது தோல்லி பற்றிக் குறிப்பிடும் பொழுது ‘மக்களின் தெரிவை மதிக்கிறேன், ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார்.
அரசியலில் தொடர்ந்து ஈடுபடப்போவதாகவும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதல் தொடர்பான விடயங்களில் தனது பங்களிப்பு இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

&w=1200&resize=1200,675&ssl=1)