கோலாலம்பூர்:
சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு இன்று பிற்பகலில் இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2 மணிக்கு வானிலை ஆய்வு மையம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், பினாங்கு (வடக்கு செபெராங் பிறை, மத்திய செபெராங் பிறை மற்றும் தெற்கு செபெராங் பிறை), சிலாங்கூர் (உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங்), கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய இடங்களில் இந்த வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



