தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேபோன்று தென்னாபிரிக்க அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை.
அண்மையில் மருத்துவ சிசிகிச்சை பெற்று வந்து நிகிடி ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே அவரால் தொடர்ந்து ஆட முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் அவர் எதிர்வரும் ஜனவரியில் போட்டிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி டர்பனில் ஆரம்பமாகவுள்ளது.
The post இலங்கை தொடரில் லுங்கி நிகிடி இல்லை appeared first on Thinakaran.
