ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பாக புடினை கடுமையாக விமர்சித்த சமையல்காரரான அலெக்ஸி ஜிமின் மர்மமாக உயிரிழந்துள்ளார். முன்னதாக அவரது விமர்சனங்களால் குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்’ என்ற அவரது ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக புடினை விமர்சித்த ‘பிரபல சமையல்காரரான அலெக்ஸி ஜிமின் சேர்பியாவில் உள்ள ஹோட்டலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு ரஷ்ய ஜனாதிபதி புடின் கிரீமிய தலைவர்களுடன் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை அலெக்ஸி ஜிமின் விமர்சித்து ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
பிரிட்டனை பூர்வீகமாகக் கொண்ட அலெக்ஸி ஜிமின் ரஷ்யாவை விட்டு வெளியேறி லண்டனில் குடிபெயர்ந்தார். அங்கிருந்தே ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று மக்களிடையே புகழ்பெற்றார்.
பின்னர் 2022ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதி புடினை அலெக்ஸி ஜிமின் தொடர்ச்சியாக கடுமையாக விமர்சித்து வந்தார். இதனையடுத்து ‘குக்கிங் வித் அலெக்ஸி ஜிமின்’ என்ற அவரது ரஷ்ய தொலைக்காட்சி நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் எழுதிய புத்தகத்தை விளம்பரப்படுத்த செர்பியாவிற்கு அலெக்ஸி ஜிமின் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டல் அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டார்.
The post ரஷ்ய ஜனாதிபதி புடினை விமர்சித்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு appeared first on Thinakaran.
&w=1200&resize=1200,675&ssl=1)