• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.45 கோடி சம்பளம்.. நிறுவனத்தின் வருவாயை $2 மில்லியனில் இருந்து $700 மில்லியனாக உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியவர்.. இறுதியில் டிஸ்மிஸ்.. காரணம் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
November 15, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.45 கோடி சம்பளம்.. நிறுவனத்தின் வருவாயை $2 மில்லியனில் இருந்து $700 மில்லியனாக உயர்த்துவதில் முக்கிய பங்காற்றியவர்.. இறுதியில் டிஸ்மிஸ்.. காரணம் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்ஃபோசிஸில், இவர் உலகளாவிய விற்பனை தலைவராக முக்கிய பங்காற்றிய இவர், ஒரு தசாப்தத்திற்குள் நிறுவனத்தின் வருவாயை $2 மில்லியனில் இருந்து சுமார் $700 மில்லியனாக உயர்த்துவதில் முக்கிய பங்காற்றினார். அவர் யார் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும், தனது கடின உழைப்பால் உயர்ந்தவர் பனீஷ் மூர்த்தி ஆவார். பெங்களூருவில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இவர், ஐஐடி மெட்ராஸில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பி.டெக் பட்டம் பெற்றார். அதன் பிறகு அகமதாபாத்தில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பிஜிடிஎம் பட்டம் பெற்றார். ஃபனீஷ் மூர்த்தி, 1987ஆம் ஆண்டில் சொனாட்டா சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். சுமார் 5 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய இவர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தலில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தில் பல ஆண்டுகளில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தார்.

விளம்பரம்

பனீஷ் மூர்த்தி இன்ஃபோசிஸில் சேர்ந்தபோது நிறுவனத்தின் மதிப்பு $2 மில்லியன் டாலராக இருந்தது. அவர் வெளியேறும்போது நிறுவனத்தின் மதிப்பு $750 மில்லியனாக உயர்ந்திருந்தது. அத்தகைய கடின உழைப்பாளி என்ற பெயரை பெற்ற பனீஷ் மூர்த்தி, மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் ஆவார். இந்நிலையில், 2002ஆம் ஆண்டில் அவருக்கு எதிராக 2 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக வழக்கு தொடர்ந்ததையடுத்து அவர் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். இதனையடுத்து அவரது வாழ்க்கை பல சவால்களை எதிர்கொண்டது. இன்ஃபோசிஸை விட்டு வெளியேறிய பிறகு, பனீஷ் ப்ரைமென்டர் மற்றும் க்விண்டன் சர்வீசஸ்(Quintant Services) லிமிடெட் நிறுவனத்தை தொடங்கினார். இது iGATE குளோபல் சொல்யூஷன்ஸின் கவனத்தை ஈர்த்தது.

விளம்பரம்

Also Read:
Safest Car | இந்தியாவில் பாதுகாப்பான கார்கள் பட்டியலில் டாப் எது தெரியுமா?

இந்நிலையில் க்விண்டன் நிறுவனத்தை iGATE குளோபல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனம் கையகப்படுத்தியது. இதனையடுத்து 2003ஆம் ஆண்டில் iGATE நிறுவனத்தில் சேர்ந்த பனீஷ் மூர்த்தி, தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். அவரது தலைமையின் கீழ், நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது. அந்த நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்த அவர், பாட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்(Patni Computer Systems) நிறுவனத்தை $1.22 பில்லியனுக்கு வாங்கவும் உதவினார். இந்த நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, iGATE நிறுவனமானது, இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. இதனால் பனீஷ் மூர்த்தியும் புகழ் பெற்றார்.

விளம்பரம்
குளிர்காலத்தில் உங்கள் தினசரி உணவில் கீரை சேர்ப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!


குளிர்காலத்தில் உங்கள் தினசரி உணவில் கீரை சேர்ப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!

iGATE நிறுவனத்தில் பனீஷ் மூர்த்தி வெற்றிகளை தந்தபோதிலும், பழைய நிறுவனத்தில் சந்தித்தது அதே பிரச்னையை மீண்டும் எதிர்கொண்டார். அவருக்கு எதிராக ஒரு ஊழியர் பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2013ஆம் ஆண்டு பனீஷ் மூர்த்தி பணிநீக்கம் செய்யப்பட்டார். பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, 2012ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் அவரது சம்பளம் சுமார் ரூ.45 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, அவர் தனது கவனத்தை ஆலோசனை மற்றும் தொழில்முனைவோர் மீது திருப்பினார். தற்போது அவர் பிரைமெண்டரின்(Primentor) தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இது உயர் வளர்ச்சியை ஊக்குவிக்க மூத்த நிர்வாகிகளுக்கு வழிகாட்டும் ஆலோசனை வழங்கும் நிறுவனமாகும்.

விளம்பரம்

.

Read More

Previous Post

கான்பூர் டெஸ்ட் | வங்கதேசத்தை சுருட்டிய இந்திய பவுலர்கள்

Next Post

கூகுளைச் சந்தித்த பிரதமர்; AI மற்றும் தரவு மைய அமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை | Makkal Osai

Next Post
கூகுளைச் சந்தித்த பிரதமர்; AI மற்றும் தரவு மைய அமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை | Makkal Osai

கூகுளைச் சந்தித்த பிரதமர்; AI மற்றும் தரவு மைய அமைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin