• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

புக்கிட் மெர்ஜாதாம் விபத்தில் சிக்கி மரண தருவாயில் தாயாரை அழைத்து மிகவும் வலிப்பதாக கூறிய மகள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
புக்கிட் மெர்ஜாதாம் விபத்தில் சிக்கி மரண தருவாயில் தாயாரை அழைத்து மிகவும் வலிப்பதாக கூறிய மகள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தன்னுடைய கார் மீது கொள்கலன் விழுந்த நிலையில் இறுதிமூச்சு விடுவதற்கு முன் பாதிக்கப்பட்ட இளம் பெண் தன்தாயாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றார். அம்மா (மம்மி) ரொம்ப வலியாக இருக்கிறது. தாங்க முடியவில்லை 21 வயதான லீஷி ரோ எனும் அந்த இளம் பெண் தனது கைப்பேசி வழி அம்மாவிடம் அழுதிருக்கிறார்.

அதிர்ச்சி அடைந்த 42 வயது லிம் எனும் அந்தப் பெண்ணின் தாயார் நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்று மகளிடம் கேட்டிருக்கிறார். ஆனால் கார் மீது கொள்கலன் விழுந்த நிலையில் உயிருக்குப் போராடிய அந்த இளம் பெண் அதன் பிறகு எதுவும் பேசவில்லை. அப்படியே மௌனமானார். மகளுக்கு ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டது என்பதை என்னால் அப்போதே உணர முடிந்தது என்று லிம் வீடியோ பேட்டி மூலம் சைனா பிரஸிடம் கூறியிருக்கிறார்.

நேற்று ஜாலான் புக்கிட் தெங்கா சாலை சமிக்ஞை விளக்குச் சந்திப்பில் ஒரு பெரிய கொள்கலன் இந்த இளம் பெண்ணின் கார் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. ஒரு பெரிய லேரி இடதுபுறமாக வளைந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததால் அது ஏற்றி வந்த பெரிய கொள்கலன் இந்த இளம் பெண்ணின் கார் மீது விழுத்தது. இன்னொரு பெண்ணின் காரும் சேதமடைந்தது.

25 வயதான டான் சாவ் தெங் எனும் அந்த காரின் ஒட்டுநர் பலத்த காயம் அடைந்த நிலையில் பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைப்பேசிகளை பயன்படுத்தும்போது கைப்பேசிகளை பயன்படுத்தும்போது முக்கியமான விஷயங்கள் தவிர மற்றபடி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும் என்மகள்களுக்கு நான் ஆலோசனை கூறியிருக்கிறேன் என்று லிம் சொன்னார்.

ஒரு வேளை நீங்கள் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்துப் பேசினால் ஏதோ முக்கியமான விஷயம் இருக்கிறது என்பது அதன் அர்த்தம். சம்பவத்தின்போது லீ எனக்கு தொலைபேசி மூலம் அழைத்ததால் ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்பதை நான் அப்போதே புரிந்துகொண்டேன் என கண் கலங்கினார் லிம். வழக்கம்போல் என்னுடைய மகள் லீ வேலைக்குச் செல்லும் சாலையில் சென்று பார்க்கும்படி என்னுடைய மற்ற மகள்களை நான் உடனடியாகக் கேட்டுக் கொண்டேன் என்று அந்த மாது கூறினார்.

நான் மீண்டும் மீண்டும் என மகளுக்கு தெலைபேசி அழைப்பு செய்தேன். ஆனால் பதில் இல்லை. அப்போதுதான் ஒரு நபர் என் மகளின் தொலைபேசியை எடுத்து பேசினார். மகள் விபத்தில் சிக்கிக் கொண்டதையும் விபத்து நடந்த இடத்தையும் அந்த நபர்தான் சொன்னார். விபத்து நடந்த இடத்தைச் சென்றதும் காரிலிருந்து மகளை மீட்கும்படி அங்கிருந்தவர்களிடம் கெஞ்சினேன். ஆனால் அந்த கொள்கலன் மிகக் கனமானதாக இருந்ததால் யாராலும் உதவ முடியவில்லை.

என்னுடைய மகள் சரியாக காலை 9.24 மணிக்கு தொலைபேசியில் என்னை அழைத்தார். ஆக என் மகள் காலை 9.30 மணிக்கு இறந்துவிட்டார் என்று கூறிய அந்த மாது துக்கத்தை அடக்க முடியாமல் அழுதார். சம்பந்தப்பட்ட 51 வயது லோரி ஓட்டுநர் 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.



Read More

Previous Post

“அமெரிக்காவை தொடர்புகொள்ள நாங்கள் தயார். ஆனால்…” – ரஷ்ய வெளியுறவு அமைச்சர் விவரிப்பு | “Ball is in US court,” says Russia’s FM Lavrov on contacts with Trump administration: Report

Next Post

பிராந்திய ஊடகவியலாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Next Post
பிராந்திய ஊடகவியலாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

பிராந்திய ஊடகவியலாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin