கோலாலம்பூர்:
சிலாங்கூர் சாலைப் போக்குவரத்துத் துறையினர் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் நேற்றுவரையான 12 நாட்களில் மேற்கொண்ட Op Khas Motosikal நடவடிக்கையில், மொத்தம் 1,575 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு விபத்துகள் அதிகம் ஏற்படக் கூடியதாக நம்பப்படும் இடங்களில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மொத்தம் 325 சாலைப் போக்குவரத்துத் துறை அமலாக்கப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று, மாநில சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குனர் அஸ்ரின் போர்ஹான் கூறினார்.
“வரும் டிசம்பர் 31 வரை தொடரும் இந்த நடவடிக்கை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் அதே வேளையில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது” என்று அவர் சொன்னார்.
“நாங்கள் இதுவரை 19,362 மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை சோதனை செய்துள்ளோம், அவர்களில் 1,575 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.


