• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலகத்தமிழா்களின் தொழில்முனைவு வாய்ப்புகளை கோலாலம்பூா் பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும்: டாக்டா் வி.ஆா்.எஸ். சம்பத்

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
உலகத்தமிழா்களின் தொழில்முனைவு வாய்ப்புகளை கோலாலம்பூா் பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும்: டாக்டா் வி.ஆா்.எஸ். சம்பத்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகத் தமிழர்களின் தொழில்முனைவு மற்றும் பொருளாதாரத்தை கோலாலம்பூரில் நவ.15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள பொருளாதார மாநாடு ஊக்குவிக்கும் என்று அந்த மாநாட்டு அமைப்புத் தலைவரும் நிறுவனத் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி தலைமை வகிக்கிறார். மாநாட்டின் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு நிறைவுரையாற்றுகிறார்.

மலேசிய உச்சநீதிமன்ற நீதிபதி வசீர் ஆலம், சுகாதார அமைச்சர் டத்தோ செரி டாக்டர் சுப்பிரமணியம், மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் மாரிமுத்து, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், மக்களவை உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், புதுச்சேரி பேரவை முன்னாள் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, விஜிபி நிறுவன குழுமத் தலைவர் வி.ஜி.சந்தோஷம், பிஜிபி குழுமத் தலைவர் டாக்டர் பழனி, ஜி.பெரியசாமி, அபுபக்கர் நிறுவன தலைவர் அபுபக்கர் உள்ளிட்டோரும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற இசைவு தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் தொழில் திறன்களையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாக உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டின் நிறுவனத் தலைவரும் சென்னை வளர்ச்சிக் கழகத் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் “தினமணி’யிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: இந்திய பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரவாசி பாரதிய திவஸ் மாநாடு மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு தொழில் வாய்ப்புகள், முதலீட்டு சூழல்கள் குறித்து கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. கலை, கலாசார அடிப்படையில் இந்தியர்களை ஒருங்கிணைக்க வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. ஆனால், தொழில், வணிக ரீதியாக மாநாடுகளை நடத்துவதில் குஜராத்தியர், பஞ்சாபியர் மட்டுமே தொடர்ந்து நடத்தி பலன் பெற்றுள்ளனர்.

அதுபோல தமிழர்களை ஒருங்கிணைக்க வலுவான தளம் தேவை என்ற சிந்தனை அடிப்படையில் உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை முதல் முறையாக சென்னையில் (2009) நடத்தினோம்.

அதன் தொடர்ச்சியாக, துபை (2011), சென்னை (2016) தென்னாப்பிரிக்காவின் டர்பன் (2017), புதுச்சேரி (2018), சென்னை (2019), கரோனா காரணமாக இணையவழியில் 2020, சென்னை(2021), துபை (2023), சென்னை (2024) ஆகிய நகரங்களிலும் நடத்தினோம். இப்போது 11-ஆவது மாநாட்டை கோலாலம்பூரில் நடத்துகிறோம். முற்றிலும் நன்கொடை, நிதியுதவி மூலம் நடத்தப்படும் இந்த மாநாட்டுக்கு தமிழக அரசு நிதியுதவி செய்துள்ளது.

பன்னாட்டு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்திறன்கள் மற்றும் மனித ஆற்றலில் சிறந்து விளங்குபவர்களாக தமிழர்கள் உள்ளனர். அவர்களின் தொழில்முனைவுத்திறன்களை இந்த மாநாடு ஊக்குவிக்கும்.

Read More

Previous Post

அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Next Post

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 4 மாத சம்பளம் கட்… என்ன காரணம்?

Next Post
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 4 மாத சம்பளம் கட்… என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு 4 மாத சம்பளம் கட்... என்ன காரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin