யாழ்ப்பாணம்(Jaffna) – மானிப்பாய், கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(11.11.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரசடை வீதி வட்டுத்தெற்கு வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம்
விபத்து தொடர்பில் தெரியவருகையில், குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை முந்திச் செல்வதற்கு முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளுடனும் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவரின் சடலமானது உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

&w=1200&resize=1200,675&ssl=1)