அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிடம் கடந்த சில நாள்களில் மூன்று முறை பேசியுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சூழலில் இஸ்ரேல் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
“கடந்த சில நாள்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ட்ரம்ப்புடன் மூன்று பேசியிருக்கிறேன். இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டணியை இன்னும் வலிமையாக இணைப்பது குறித்துப் பேசினோம்” என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

