நாட்டில் உள்ள மூன்று பெரிய டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை சுமார் 25% வரை உயர்த்தியுள்ளன. பலரும் தற்போதும் வீட்டிலிருந்தே வேலை பார்த்து வரும் நிலையில், ஹை-ஸ்பீட் பிராட்பேண்ட் கனெக்ஷன் கொண்டிருப்பவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
எனினும் மொபைல் டேட்டாவை கொண்டு ஒர்க் ஃப்ரம் ஹோம் பார்த்து வருபவர்களுக்கு சில நேரங்களில் அன்லிமிட்டட் காலிங் மற்றும் லிமிட்டட் டேட்டா தேவைப்படலாம். இந்த தேவை உள்ளவர்கள் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ-யின் மலிவு வருடாந்திர ரீசார்ஜ் பிளான்கள் உள்ளன. வீட்டிலிருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு மேற்கண்ட நிறுவனங்கள் வழங்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ற வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.1,899 ரீசார்ஜ் பிளான்:
ஜியோவின் இந்த ரீசார்ஜ் பிளான் அன்லிமிடெட் கால்ஸ், 336 நாட்கள் வேலிடிட்டி, 3,600 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை யூஸர்களுக்கு வழங்குகிறது. இந்த பிளானில் மொத்தம் 24GB டேட்டா வழங்கப்படும். வேலிடிட்டியை ஒப்பிடும் போது டேட்டா மிகவும் குறைவு தான். எனவே, நீங்கள் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் அல்லது டேட்டா பேக்ஸ்களை தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டும். 24GB டேட்டா தீர்ந்தவுடன் நெட் ஸ்பீட் 64 Kbps-ஆக குறையும். இந்த பிளான் JioCinema, JioTV மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான காம்ப்ளிமென்டரி அக்சஸை கொண்டுள்ளது. கூடுதல் டேட்டா தேவைப்படுபவர்களுக்கு, 1GB-க்கு ரூ.19 முதல் அல்லது 2GB கூடுதல் 4ஜி டேட்டாவுக்கு ரூ.29 முதல் ஆட்-ஆன் பேக்கேஜ்களை ஜியோ யூஸர்களுக்கு வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.1,999 ரீசார்ஜ் பிளான்:
ஏர்டெல் வழங்கும் ரூ.1,999 பிளான், ஜியோவை விட சற்று விலை உயர்ந்தது என்றாலும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. ஜியோவை போலவே இந்த பிளானும் மொத்தம் 24GB டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ், வேலிடிட்டி பீரியட் வரை அன்லிமிட்டட் கால்ஸ் நன்மைகளும் உள்ளது. கூடுதல் டேட்டா தேவைப்படுவோரிடம் ஒவ்வொரு கூடுதல் ஜிபி 4ஜி டேட்டாவிற்கும்ரூ.22-ஐ வசூலிக்கிறது ஏர்டெல். அதே நேரம் ரூ.33-க்கு 2GB(1 நாள்) டேட்டாவை வழங்குகிறது.
Vi நிறுவனத்தின் ரூ1,999 ரீசார்ஜ் பிளான்:
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.1,999 பிளான் கிட்டத்தட்ட ஏர்டெல் நிறுவனத்தின் சலுகைகளுடன் பொருந்துகிறது. இந்த பிளானில் இதில் 24GB டேட்டா, அன்மிலிட்டட் கால்ஸ் மற்றும் 3,600 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் அடங்கும். கூடுதல் டேட்டா தேவைப்படுவோருக்கு 1.5GB (ஒரு நாளுக்கு) 4ஜி டேட்டாவிற்கு ரூ.26 மற்றும் 2GB (2 நாட்களுக்கு) 4ஜி டேட்டாவிற்கு ரூ.33-ஐ நிறுவனம் வசூலிக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
