• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

3- ஆவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி… 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது

GenevaTimes by GenevaTimes
November 10, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
3- ஆவது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி… 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கதேசத்திற்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்தை 133 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 தற்போது ஐதராபாதின் உப்பால் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். அபிஷேக் 4 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமாருடன் இணைந்து சஞ்சு சாம்சன் வான வேடிக்கை காண்பித்தார்.

விளம்பரம்

8 சிக்சர் மற்றும் 11 பவுண்டரியுடன் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். 40 பந்துகளில் சதம் அடித்த சஞ்சு சாம்சன், டி20 போட்டிகளில் குறைவான பந்துகளில் சதம் விளாசிய 2 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். 35 பந்துகளில் சதம் விளாசிய ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.

சஞ்சு சாம்சனுக்கு போட்டியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்சர் 8 பவுண்டரியுடன் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். ரியான் பராக் 34 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 47 ரன்களும் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 297 ரன்கள் எடுத்திருந்தது.

விளம்பரம்

இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வங்கதேச அணி பறிகொடுத்தது. லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹித் ஹிருதாய் இணை மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 4 ஆவது விக்கெட்டிற்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதையும் படிங்க – 500+ ரன்கள் எடுத்தும் பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி… மோசமான ரிக்கார்டில் முதல் அணி

விளம்பரம்

லிட்டன் தாஸ் 42 ரன்களில் வெளியேற, ஹிருதாய் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புகளுக்கு 164 ரன்கள் எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது இந்திய அணி.

.

Read More

Previous Post

“நம் ஒற்றுமை சிதைக்க காங்கிரஸ் முயற்சி”

Next Post

பெட்ரோல், டீசல் விலை & இன்றைய நிலவரம் என்ன?

Next Post
பெட்ரோல், டீசல் விலை & இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல், டீசல் விலை & இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin