கொழும்பு: இந்திய கடற்படையின் நீா்மூழ்கிக் கப்பல் ஐஎன்எஸ் வேலா மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை கொழும்பு துறைமுகம் வந்தடைந்தது.
இந்திய நீா்மூழ்கிக் கப்பலுக்கு, கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினரால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படை வீரா்கள் நீா்மூழ்கிக் கப்பலின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கும், இந்திய நீர்மூழ்கிக் கப்பலின் குழுவினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையே கூடைப்பந்து போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

