கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இதற்கு இந்திய அரசு உதவியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால், இரு நாடுகளிடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து வன்முறை, உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார் என்று கனடா வெளியுறவு துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் ஆதாரமற்றது என்றும் கூறியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், இந்த விவகாரத்தில் கனடா தரப்பின் விளக்கத்தை தெரிவிக்குமாறு அந்த நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே கனடாவில் இந்திய தூதரக அதிகாரிகளின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனடா அரசின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
கனடாவின் செயல்கள் தூதரக உடன்படிக்கையின் அபட்டமான மீறல் என்றும், கனடா அரசின் செயல்கள் இரு நாடுகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்றும் ரன்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)