• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீனா வழங்கிய நிதி திறைசேரிக்கு அனுப்பிவைப்பு

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
சீனா வழங்கிய நிதி திறைசேரிக்கு அனுப்பிவைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 30 வரை, இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சீன மக்கள் குடியரசினால் வழங்கப்பட்ட சுமார் 30 மில்லியன் ரூபா நிதியுதவி திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த மக்களின் வீடுகளை புனரமைப்பதற்காக தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திலிருந்து பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம் அந்த நிதியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் போதுமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாததால், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருந்தது.

மேலும், அவசரகால மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசில் இருந்து கிடைக்கவுள்ள 10 மில்லியன் யுவான் பொருள் உதவி மற்றும் பொருட்கள், இலங்கைக்கு கிடைத்தவுடன் முறையான கணக்குப்பதிவுக்குப் பின்னர் விநியோகிக்கப்பட உள்ளன.

மேலும், சேதமடைந்த வீடுகள் மற்றும் உடைமைகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குதல், வீடுகளின் கட்டுமானம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளையும் அனர்த்த நிவாரணம் மற்றும் கண்காணிப்புத் திட்டத்தின் ஊடாக விரைவாக நிறைவேற்றவும், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை (USD 100,000) இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்த இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹொங்(Qi Zhenhong) இந்த உதவித் தொகையை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு ரூ. 30 மில்லியன் அன்பளிப்பு

The post சீனா வழங்கிய நிதி திறைசேரிக்கு அனுப்பிவைப்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

19.5 லட்ச பட்டதாரிகள் திறமையற்ற அல்லது குறைந்த திறன் கொண்ட வேலைகளில் பணிபுரிகின்றனர் – Malaysiakini

Next Post

சமோசா சர்ச்சை: இமாச்சலப் பிரதேச முதல்வரை கிண்டல் செய்து பாஜக போராட்டம் | Himachal: Bharatiya Janata Yuva Morcha hold ‘Samosa march’ in Shimla

Next Post
சமோசா சர்ச்சை: இமாச்சலப் பிரதேச முதல்வரை கிண்டல் செய்து பாஜக போராட்டம் | Himachal: Bharatiya Janata Yuva Morcha hold ‘Samosa march’ in Shimla

சமோசா சர்ச்சை: இமாச்சலப் பிரதேச முதல்வரை கிண்டல் செய்து பாஜக போராட்டம் | Himachal: Bharatiya Janata Yuva Morcha hold 'Samosa march' in Shimla

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin