திருச்சூர் பூரம் திருவிழாவின்போது ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் விழா கொண்டாடப்பட்டது. அப்போது ஆம்புலன்சுகளுக்கு என ஒதுக்கப்பட்ட வழித்தடத்தில், விதிகளை மீறி சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் திருச்சூர் கிழக்கு காவல்நிலையத்தில் சுரேஷ் கோபி மீது புகார் அளித்தார். அதில் திருவிழாவின்போது ஆம்புலன்சை பயன்படுத்தி, மக்களின் பாதுகாப்புக்கு சுரேஷ் கோபி அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டது.
காலில் ஏற்பட்ட அசௌகர்யத்தின் காரணமாக தாம் ஆம்புலன்சில் சென்றதாக சுரேஷ் கோபி கூறியிருந்தார். பூரம் விழாவின்போது பாதுகாப்பில் எந்த விதிகளும் மீறப்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்திருந்தது. எனினும் சுரேஷ்கோபி ஆம்புலன்சில் வந்து இறங்கிய வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், சில இடங்களில் காவலர்கள் அத்துமீறியதுடன் பாதுகாப்பு விதிமீறல் நடந்ததாகவும், இது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் சுரேஷ் கோபி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
