இந்த மாத துவக்கத்தில் நாட்டில் இருக்கும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஆயுஷ்மான் பாரத் வயா வந்தனா (Ayushman Bharat Vaya Vandana) என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வருமான அளவை பொருட்படுத்தாமல் அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான அரசாங்க ஆதரவுடன் கூடிய சுகாதார காப்பீடு இப்போது கிடைக்கிறது. இதன் மூலம் குடும்பங்களுக்கான சுகாதார உத்தரவாதத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத்-பிஎம்-ஜே (ஜன் ஆரோக்யா யோஜனா) கீழ் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்த மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் கூடுதல் கவரேஜைப் பெறுவார்கள்.
ஆயுஷ்மான் வயா வந்தனா திட்டத்தின் முதன்மை நோக்கம் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் அவர்களின் வருமானம் அல்லது நிதி நிலைமையைப் பொருட்படுத்தாமல், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குவதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நலத்திட்டம், மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் உயர்மட்ட மருத்துவ சிகிச்சையைப் பெற உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையம் (NHA) இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் ப்ராசஸை செயல்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்கள் beneficiary portal (beneficiary.nha.gov.in) அல்லது NHA-ன் ஆயுஷ்மான் ஆப் மூலம் ஆயுஷ்மான் பாரத் ‘வய வந்தனா’ கார்டை பெற அனுமதிக்கிறது. தவிர மூத்த குடிமக்கள் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் PM-JAY எம்பேனல் செய்யப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பொது சேவை மையங்களிலும் இதற்கான ப்ராசஸை முடிக்க முடியும்.
ஒருவேளை மூத்த குடிமகனாக இருக்கும் குறிப்பிட்ட பயனாளியால் முன்கூட்டியே ப்ராசஸை முடிக்க முடியாவிட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நேரத்திலும் கூட ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் கார்ட் கிரியேஷனை எளிதாக செய்யலாம். மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைச் செலவுகள் அல்லது அதனுடன் தொடர்புடைய உடல்நல காப்பீட்டுச் செலவுகளை ஈடுகட்ட போராடும் முதியவர்களுக்கு இத்திட்டம் கூடுதல் உதவியை வழங்கும்.
அதேபோல நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற ஏற்கனவே இருக்கும் சுகாதார பிரச்சனைகளை கொண்ட மூத்த குடிமக்களுக்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும். வயதைத் தவிர, ஏற்கனவே உள்ள நோய்களும், உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களை அதிகரிக்கலாம். தீவிரத்தை பொறுத்து மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசிகளை வழங்க மறுக்கக்கூடும்.
இதையும் படிக்க:
ரூ.750 கோடி மதிப்புள்ள வீடு.. ரூ.2,04,300 கோடிக்கு மேல் சொத்து.. இந்தியாவின் டாப் பணக்காரர் பற்றி தெரியுமா?
ஏற்கனவே ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்களும் கூட இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம். ஒருவேளை குறிப்பிட்ட வருடத்தில் அவர்களின் காப்பீட்டுத் தொகை லிமிட் தீர்ந்துவிட்டால், இது உதவியாக இருக்கலாம். மூத்த குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனைகளின் முழு, மாநில வாரியான பட்டியலையும் NHA சமீபத்தில் பகிர்ந்துள்ளது. இந்த திட்டம் அனைத்து வயதானவர்களுக்கும் மலிவு விலையில் சுகாதார அணுகலை உத்தரவாதம் செய்கிறது, இதன் மூலம் மூத்த சுகாதார அணுகல் மற்றும் நியாயமான சிகிச்சையின் தரம் மேம்படும்.
மேலும் இந்த புதிய திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024ஆம் ஆண்டில் ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டையை பெற்ற எந்தவொரு நபரும் AB PMJAY உடன் இணைக்கப்பட்டுள்ள எந்த மருத்துவமனையிலும் ரூ. 5 லட்சம் வரை செலவில்லாத மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு உரிமையுடையவராகிறார். 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எந்த இந்திய குடிமகனும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர், இந்த திட்டத்திற்கு எந்த வருமான அளவுகோலும் இல்லை. இத்திட்டத்தின் மூலம், அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மலிவு விலையில் சுகாதாரத் தீர்வுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: UPI Payment: நீங்க பயன்படுத்தும் பேமென்ட் ஆப்ஸில் இதை கவனிச்சிருக்கீங்களா? – கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
-
ஆதார் கார்டு
-
மொபைல் நம்பர்
-
இ-மெயில் ஐடி
-
வயது சான்று
-
கேஒய்சி
.
&w=750&resize=750,375&ssl=1)
