தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் இரண்டாவது தேசிய அளவிலான கயாக்கிங் மற்றும் கேனோயிங் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய அளவில் நடைபெறும் போட்டி என்பதால் இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி, பீகார், ராஜஸ்தான் போன்ற 22 மாநிலங்களிலிருந்து 200 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.
கயாக்கிங் மற்றும் கேனோயிங் என்றால் படகில் அமர்ந்தும் மற்றும் நின்றும் துடுப்பு போடுவது. இந்த போட்டியானது 400 மீட்டர் அளவில் நடைபெற்றது. அதாவது 400 மீட்டர் தொலைவில் கடலுக்குத் துடுப்பு போட்டு சென்று திரும்பி கரையை வந்து சேர வேண்டும்.
இதையும் படிங்க: சுற்றுலாத் தலங்களைக் கண்டாலே சிலையாகிடுவேன்… சிலிர்த்து போய் சில்லறையை சிதறவிட்ட மக்கள்…
இந்த போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியாகப் போட்டிகள் நடைபெற்றது, வயது வாரியமாகவும், பிரித்தும் நடைபெற்றது. இது குறித்து போட்டியாளர் மலர்க்கொடி கூறுகையில், “நான் புதுச்சேரியிலிருந்து வந்துள்ளேன். இரண்டாம் முறை இந்த போட்டி நடைபெறுகின்றது. சென்ற ஆண்டும் நான் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளேன்.
இந்த போட்டியானது மூன்று நாட்கள் நடைபெறும், பல மாநிலங்களிலிருந்து 200 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று இருக்கின்றனர். அதனால் போட்டி கொஞ்சம் கடினமாகத் தான் இருக்கின்றது. இருப்பினும் என்னுடைய முழு பங்களிப்பையும் நான் இங்கு காட்டி வருகிறேன்.
மேலும், கயாக்கிங் மற்றும் கேனோயிங் என்பது ஒரு நல்ல விளையாட்டு தான் அதனால் பெற்றோர்கள் கயாக்கிங் மற்றும் கேனோயிங் கற்றுக் கொடுக்கலாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
