• Login
Thursday, March 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


குறித்த விசாரணை இன்று (7) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது.



உயிர்த்த ஞாயிறு தினத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் எனத் தகவல் கிடைத்தும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டை அந்தத் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் என். ஜேசுதாசன் ஆகியோரால் கோட்டை நீதவான் நீதிமன்றில் இந்த தனிப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிட் மனு



முறைப்பாட்டுக்கு எதிராக அவர் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த தனிப்பட்ட முறைப்பாட்டுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ரிட் மனுவை, சோபித ராஜகருணா தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Sirisena Seeks Court Relief Easter Case Summons


மனுதாரர் மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா, சந்தேக நபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அழைப்பாணை விடுக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டுள்ளார்.



சாட்சியங்களை உரிய முறையில் மதிப்பீடு செய்யாமல் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.


அதனையடுத்து, மேலதிக விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா மேலதிக காரணிகளை முன்வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

பகாங் சுல்தானகத்தில் தாக்குதல் பதிவிட்டதற்காக வேலையில்லாத நபருக்கு ரிம 15000 அபராதம் விதிக்கப்பட்டது – Malaysiakini

Next Post

காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு; நேற்று வாக்குவாதம் இன்று கைகலப்பு!

Next Post
காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு; நேற்று வாக்குவாதம் இன்று கைகலப்பு!

காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு; நேற்று வாக்குவாதம் இன்று கைகலப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin