ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-யை மீண்டும் கொண்டுவரும் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது சட்டப்பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த சட்டப்பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் புதியதாக பதவியேற்ற தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி சட்டப்பிரிவு 370-யை மீட்டெடுப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தது.
இதையும் படிக்க | வாஷிங்டன், கலிஃபோர்னியாவில் கமலா வெற்றி! அமெரிக்க வாக்கு எண்ணிக்கையில் பரபரப்பு
துணை முதல்வர் சுரிந்தர் குமார் சௌத்ரி இந்த தீர்மானத்தை கோரினார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சுனில் குமார் உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
எனினும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

