பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் கீழ் 19ஆவது தவணைத் தொகையை பெறுவதற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கான பணம் வருகிற பிப்ரவரி 2025-ல் வெளியாகும் என்று அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 18வது இன்ஸ்டால்மென்ட் வெளியிடப்பட்டதை அடுத்து மொத்தமாக 9.4 கோடி விவசாயிகள் இதுவரை அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் 20,000 கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்திற்கான 17வது இன்ஸ்டால்மென்ட் தொகை பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் இந்த வருடம் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது.
2024 ஜூன் 18ஆம் தேதியன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சென்றபோது, PM கிசான் திட்டத்தின் கீழ் 17வது இன்ஸ்டால்மென்ட் தொகையை வெளியிட்டார். மேலும் இதற்கான 16வது தவணை தொகை பிரதமர் மோடி அவர்களால் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் வெளியானது.
PM கிசான் திட்டம் என்றால் என்ன?
PM கிசான் திட்டத்தின்கீழ் பெரும்பாலான விவசாயிகள் 4 மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாயை பெறுவார்கள். அதாவது ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக 6,000 ரூபாய். இந்த பணம் ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளில் வழங்கப்படுகிறது: ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் பலன் பெறும் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் டெபாசிட் செய்யப்படுகிறது.
இந்த திட்டமானது 2019 வெளியிடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஷ்கோயல் அவர்களால் வெளியிடப்பட்டது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தினார். தற்போது இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடி பலன் திட்டமாக அமைகிறது.
PM கிசான் திட்டம்: eKYC இன்ஸ்டால்மெண்ட் தொகைகளை பெறுவதற்கு விவசாயிகள் தங்களுடைய eKYC நிறைவு செய்திருக்க வேண்டும். அதாவது இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, “PM கிசான் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் eKYC செய்வது கட்டாயம். PM கிசான் போர்ட்டலில் OTP அடிப்படையிலான eKYC கிடைக்கிறது அல்லது அருகில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC நிறைவு செய்யலாம்.
PM கிசான் பெனிஃபிஷியரி ஸ்டேட்டஸை சரிபார்ப்பது எப்படி?
-
www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
-
இப்போது ஸ்கிரீனின் வலது புறம் உள்ள “நோ யுவர் ஸ்டேட்டஸ்” டேபை கிளிக் செய்யவும்.
-
உங்களுடைய பதிவு எண்ணை என்டர் செய்யுங்கள். பிறகு கேப்சா கோடை நிரப்பி, “கெட் டேட்டா” ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
-
உங்களுடைய பெனிஃபீஷியரி நிலை ஸ்கிரீனில் காண்பிக்கப்படும்.
இதையும் படிக்க:
SBI, HDFC, ICICI வங்கி FDக்கு கொடுக்கும் வட்டி விகிதங்கள் எவ்வளவு தெரியுமா?
PM கிசான் பலன் பெறுவோர் பட்டியலில் உங்களுடைய பெயரை சரிபார்ப்பது எப்படி?
-
www.pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ PM கிசான் வெப்சைட்டுக்கு செல்லவும்.
-
“பெனிஃபிஷியரி லிஸ்ட்” டேபை கிளிக் செய்யுங்கள்.
-
இப்போது மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம் மற்றும் கிராமம் போன்ற விவரங்களை டிராப் டவுனில் இருந்து தேர்வு செய்யவும்.
-
அடுத்ததாக “கெட் ரிப்போர்ட்” டேபை கிளிக் செய்யுங்கள்.
-
இதன் பிறகு பலன் பெறுவோர் பட்டியல் டிஸ்ப்ளே செய்யப்படும்.
இதையும் படிக்க:
அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு.. எவ்வளவு தெரியுமா? – நிதி அமைச்சகம் வெளியிட்ட டேட்டா!
PM கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
-
www.pmkisan.gov.in என்ற வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
-
“நியூ ஃபார்மர் ரிஜிஸ்ட்ரேஷன்” ஆப்ஷனை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் நம்பரை என்டர் செய்யுங்கள். கேப்சா கோடை நிரப்பவும்.
-
தேவையான விவரங்களை நிரப்பி “எஸ்” என்பதை கிளிக் செய்யுங்கள்.
-
இப்போது PM கிசான் விண்ணப்ப படிவத்தை நிரப்பி “சேவ்” பட்டனை அழுத்தி, அதனை எதிர்கால தேவைக்காக ஒரு பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
.
&w=750&resize=750,375&ssl=1)
