சாமானிய மக்கள் மீண்டும் பணவீக்கத்தால் பாதிக்கப்படப் போகிறார்கள்.!! டீ, பிஸ்கட், எண்ணெய் மற்றும் ஷாம்பு போன்ற அன்றாட உபயோகப் பொருட்களுக்கு விரைவில் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதிக உற்பத்திச் செலவுகள் மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாக ஜூலை-செப்டம்பர் காலாண்டில் நாட்டின் முக்கிய எஃப்எம்சிஜி நிறுவனங்களின் மார்ஜின்கள் சரிந்ததால், இப்போது விலையை உயர்த்த நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
பாமாயில், காபி, கொக்கோ போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் தற்போது சில நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளன. உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் உணவு பண வீக்கம் போன்ற காரணங்களால் கடந்த ஜூலை – செப்டம்பர் மாதம் வரை முடிவடைந்த 2வது காலாண்டில் FMCG நிறுவனங்கள் (Fast Moving Consumer Goods) மோசமான நிலையை எட்டி உள்ளது. தற்போது எஃப்எம்சிஜி நிறுவனங்களின் தயாரிப்புகளின் விற்பனை சற்று குறைந்துள்ளது.
குறிப்பாக ஹிந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட் (HUL), கோத்ரேஜ் கன்ஸ்யுமர் ப்ராடக்ட் லிமிடெட் (GCPL), மாரிகோ (Marico), ஐடிசி (ITC) மற்றும் டாடா கன்சூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (TCPL) உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் விற்பனைகள் சரிந்துள்ளன. இதனால் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய பொருட்களின் விலையை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பாமாயில், காபி, கோகோ உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை சமீபத்தில் அதிகரித்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் எதிர்பார்த்ததை விட நகர்ப்புறங்களில் விற்பனை குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எஃப்எம்சிஜி துறையின் மொத்த விற்பனையில் நகர்ப்புற நுகர்வு பங்கு 65 முதல் 68 சதவீதம் வரை இருந்தது என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நகர்ப்புறங்களை விட கிராமப்புற சந்தைகளில் விற்பனை சிறப்பாக இருந்தது.
கோத்ரேஜ் கன்சூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் (ஜிசிபிஎல்) நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுதிர் சீதாபதி கூறுகையில், இந்த நிதியாண்டின் 2வது காலாண்டியில் பல இடையூறுகளை சந்தித்துள்ளோம். இது ஒரு குறுகிய கால பின்னடைவாகவே நாங்கள் உணர்கிறோம், எனவே செலவுகளை குறைக்கவும், லாபத்தை மீட்டெடுக்கவும் விலை உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், GCPL நிறுவனம் தொடர்ந்து சிந்தால், கோத்ரேஜ் நம்பர் 1 மற்றும் ஹிட் போன்ற தயாரிப்புகளில் நிலையான செயல்திறனை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் காலாண்டில் தேவைக்கான சூழல் சவாலாகவே இருந்தது என்றும் டாபர் இந்தியா கூறுகிறது. நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17.65 சதவீதம் சரிந்து ரூ.417.52 கோடியாக உள்ளது. இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 5.46 சதவீதம் சரிந்து ரூ.3,028.59 கோடியாக உள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரேஷ் நாராயணன் கூறியாதவது, உணவுப் பணவீக்கம் வீட்டு வரவு செலவுத் திட்டத்தை பாதித்துள்ளதால் நடுத்தரப் பிரிவினர் அழுத்தத்தில் உள்ளனர் என்றும், பழங்கள், காய்கறிகள் மற்றும் எண்ணெய்களின் விலைகள் வேகமாக உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நெஸ்லேயில் மேகி, கிட்கேட் மற்றும் நெஸ்கஃபே போன்ற பிராண்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
டாடா நுகர்வோர் தயாரிப்புகள் லிமிடெட் (டிசிபிஎல்) தலைமை நிர்வாக அதிகாரி சுனில் டிசோசா கூறுகையில், நகர்ப்புறங்களில் நுகர்வோர் செலவினங்களில் சரிவு காணப்படுகிறது என்று கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் யூனிலீவர் சிஇஓ ரோஹித் ஜாவாவும், இந்த காலாண்டில் சந்தையின் வளர்ச்சி மந்தமாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
