• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஐரோப்பாவுடன் இணையும் இஸ்ரோ!

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
சூரியனை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஐரோப்பாவுடன் இணையும் இஸ்ரோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐரோப்பிய ஒன்றியத்தின் சூரியனை ஆய்வு செய்யும் ப்ரோபா – 3 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவ இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்ய இருக்கும் ஐரோப்பாவின் ப்ரோபா 3 செயற்கைக்கோள் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி – எக்ஸ்எல் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஐரோப்பாவுடன் இணைந்து இஸ்ரோ இந்த ஆய்வில் ஈடுபடவுள்ளது.

ப்ரோபா 3 திட்டத்தில் இரு செயற்கைக்கோள்கள் இணைந்து 144 மீட்டர் நீளத்தினாலான கருவியை உருவாக்கி ஆய்வை மேற்கொள்ளும். இந்தக் கருவி சோலார் கரோனாகிராஃப் என அழைக்கப்படுகிறது. இது சூரியனின் நேரடி ஒளியைத் தடுத்து ஆய்வை மேற்கொள்ள தெளிவான பார்வையை வழங்கும்.

உலகின் மிகத் துல்லியமான உருவாக்கத்தில் அமைக்கப்பட்ட விண்வெளி திட்டமான இதன் மூலம் சூரியனின் வெளிப்புற அமைப்பை மிகத் துல்லியமாக ஆராயமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க | 192 நாள்களுக்கு பிறகு பூமி திரும்பிய 3 சீன விண்வெளி வீரர்கள்!

புது தில்லியில் இன்று நடைபெற்ற விண்வெளி அறிவியல் மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ”சூரியனை ஆய்வு செய்ய ஐரோப்பா ஒன்றியத்தின் செயற்கைக் கோளான ப்ரோபா 3 வருகிற டிசம்பர் மாதம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படும்.

60 முதல் 70 ஆண்டுகாலமாக மறைமுகமாக செயல்பட்டு வந்த விண்வெளி ஆய்வுத் துறை தற்போதைய விண்வெளி கொள்கைகள் 2023 இன் காரணமாக பொதுத் துறைக்கு திறக்கப்பட்டுள்ளது. இது தொழில்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவரும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்

இந்திய விண்வெளி மையமான ‘பாரதிய அந்தரிக்ஷா நிலையத்தை’ (பிஏஎஸ்) வருகிற 2035 ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் நிறுவி, 2040 ஆம் ஆண்டுக்குள் முதல் இந்தியரை நிலவில் தரையிறக்கும் லட்சிய இலக்கை அடைவோம்.

நம் நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். வழிகாட்டுதல், செயற்கைக்கோள் புகைப்படங்கள், நிலப்பரப்பின் வரைபடங்களைக் காட்டுதல் என ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க விண்வெளித் துறையே உதவுகிறது.

உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு வரும் ஆண்டுகளில் 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்” என்று அவர் தெரிவித்தார்.

Read More

Previous Post

‘கிரிக்கெட் கிங்’ விராட் கோலியின் பிறந்தநாள் இன்று

Next Post

“ஆஸி., டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் வையுங்கள்” – இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ் | Focus on winning bgt series Sunil Gavaskar s advice for Team India

Next Post
“ஆஸி., டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் வையுங்கள்” – இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ் | Focus on winning bgt series Sunil Gavaskar s advice for Team India

“ஆஸி., டெஸ்ட் தொடரை வெல்வதில் கவனம் வையுங்கள்” - இந்திய அணிக்கு கவாஸ்கர் அட்வைஸ் | Focus on winning bgt series Sunil Gavaskar s advice for Team India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin