‘கிரிக்கெட் உலகின் அரசன்’என தன் இரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் பிறந்த நாள் இன்றாகும்.
அவரது 36ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்நாள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அவர் படைத்துள்ள தனித்துவ சாதனைகள்:
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் 765 ஓட்டங்களை எடுத்திருந்தார் கோலி. அதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஓட்டமாக இது அமைந்தது.
கடந்த ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக சதம் விளாசினார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 50ஆவது சதமாகும். இந்த பார்மெட்டில் அதிக சதம் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 267 இன்னிங்ஸில் 13,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சர்வதேச T20 கிரிக்கெட்டில் 39 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.
T20 உலகக் கிண்ணம், உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன் டிராபி பட்டங்களை வென்ற இந்திய அணியில் விளையாடியவர்.
அண்மையில் முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருப்பினும் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ‘கிரிக்கெட் கிங்’ விராட் கோலியின் பிறந்தநாள் இன்று appeared first on Thinakaran.


