அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான நாட்டின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும், குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கமலா ஹாரிஸுக்கான ஆதரவு பெருகிக்கொண்டே வந்தது. அதேசமயம், ட்ரம்பும் அதிபராவதற்கான வாய்ப்பு சமமாக இருக்கும் சூழலே நிலவுகிறது. இத்தகைய பரபரப்பான சூழலில், அமெரிக்காவில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 538 இடங்களில் 270 இடங்களில் வெற்றிபெறுபவர் அதிபராக பதவியேற்பார்.

