• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

திருநெல்வேலி பித்தளை பாத்திரத்துக்கு தனி மவுசு… ட்ரெண்ட்டுக்கு ஏற்ற ரகங்களும் இருக்கு…

GenevaTimes by GenevaTimes
November 5, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
திருநெல்வேலி பித்தளை பாத்திரத்துக்கு தனி மவுசு… ட்ரெண்ட்டுக்கு ஏற்ற ரகங்களும் இருக்கு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்த காலத்தில் பித்தளைப் பாத்திரங்கள் பயன்பாடு குறைந்த போதிலும் மக்களின் தேவை என்ன என்று அறிந்து, அதற்கு ஏற்ப பித்தளைப் பாத்திரங்களை மாற்றி அமைத்து இன்றைய நவீன காலத்திலும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருநெல்வேலியைச் சேர்ந்த டி.வெங்கடாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் நிறுவனத்தினர். இவர்கள் மொத்த விற்பனை மட்டுமில்லாமல் தனிப்பட்டவர்களுக்கு என ஆன்லைன் முறையிலும் தங்களின் பித்தளைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வெங்கட் வசந்த் கூறுகையில், “1940ஆம் ஆண்டில் என் கொள்ளு தாத்தா வெங்கடாசலம் செட்டியார் தான் கடையை ஆரம்பித்தார். அவர் இந்த தொழிலில் முதலில் ஈடுபடும் போது கடையாக எல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஒவ்வொரு ஊராகச் சென்று அங்குள்ள சிறந்த பொருட்களை வாங்கி அதனை ஊர் சந்தையில் விற்பனை செய்து வந்தார். அப்படி தான் தாத்தா பாத்திரத் தொழிலைத் துவங்கினார்.

விளம்பரம்

இதையும் படிங்க: B.Pharm/D.Pharm படிச்சு இருக்கீங்களா… முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு உங்களுக்குத் தான்…

அந்த சமயம் ஒரு முறை அவர் திருநெல்வேலிக்குச் சென்ற போது அங்கு பித்தளைப் பாத்திரங்களை வாங்கி அதனை விற்பனை செய்தார். மக்களும் அந்த பித்தளைப் பாத்திரங்களை விரும்ப ஆரம்பித்தார்கள். மறுபடி அவர் விற்பனைக்குப் போகும் போது எல்லாம் திருநெல்வேலியின் பித்தளைப் பாத்திரங்கள் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர்.

அதைப் புரிந்து கொண்டு, 1947ஆம் ஆண்டு திருநெல்வேலியில் செட்டிலானார். அங்கு வந்த பிறகு பித்தளைப் பாத்திரங்களைத் தயாரிப்பவர்கள் பற்றித் தெரிந்து கொண்டது மட்டுமில்லாமல் இந்தப் பாத்திரங்களைத் தயாரிக்கும் முறைகளையும் கற்றுக் கொண்டார். அதன் பிறகு 1951ல் வி.டி.வெங்கடாச்சலம் செட்டி யார் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் கடையினைத் துவங்கினார். அவரை தொடர்ந்து என் தாத்தா வைத்திலிங்க செட்டியார், அந்தத் தொழிலை நடத்த ஆரம்பித்தார்.

விளம்பரம்

திருநெல்வேலியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த எங்கள் பாத்திரங்களைத் தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் மொத்த விற்பனையாக மாற்றி வியாபாரத்தினைப் பெருக்கினார். இதற்காகத் தனிப்பட்ட கலைஞர்களைக் கொண்டு தாத்தா பாத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்தார். கைதேர்ந்த கலைஞர்களால் தயாரிக்கப்பட்டதால், ஒவ்வொரு பொருட்களும் மிகவும் உறுதியாகவும் தரமாகவும் இருந்தது.

இதையும் படிங்க: மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மலர் தூவி மரியாதை… அமரன் படம் பார்த்து மக்கள் உருக்கம்…

பித்தளைப் பாத்திரங்கள் பெரும்பாலும் பொருட்களைச் சேகரித்து வைக்க, அதாவது அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் கொட்டி வைக்கவும், தண்ணீர் பிடித்து வைக்கவும் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.

விளம்பரம்

இன்றைய தலைமுறையினர் விரும்பும் வடிவத்தில் பாத்திரங்களின் வடிவமைப்பை மாற்றினோம். மாடர்ன் மக்களுக்காக மாடர்ன் சமையல் பாத்திரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம். மொத்த விற்பனை மட்டுமில்லாமல், நேரடியாக வாடிக்கையாளர்களிடம் தங்களின் பொருட்களைக் கொடுக்கிறோம்.

நான் 2021இல் அப்பாவுடன் சேர்ந்து தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். தொழில் சிறக்க வாடிக்கையாளர்கள் அவசியம். அவர்களின் தேவையை அறிந்து நல்ல தரத்தில் நியாயமான விலையில் கொடுத்து வந்தால், எந்த தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக முன்னேறலாம். அதைத் தான் நாங்கள் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம். இதற்குத் தொழில்நுட்பம் எங்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது.

விளம்பரம்

இதையும் படிங்க: அந்தமான் தீவிலுள்ள பழங்குடியினரையும் இங்க பாக்கலாம்… ஊட்டி போனால் இங்க ஒரு விசிட் அடிங்க…

கோவிட் காலத்தில் அனைவரும் வீட்டில் முடங்கிய நிலையில் கைப்பேசியில் 18 பாத்திரங்கள் கொண்ட ரயில் அடுக்கு பாத்திரம் குறித்த வீடியோ வைரலானது. அதில் இந்த பாத்திரம் மிகவும் அரியது, விலையும் அதிகம் என்று குறிப்பிட்டிருந்தது.

அதை பார்த்த போது, இதே பாத்திரத்தை நாங்கள் நான்கு தலைமுறையாகச் செய்து வருகிறோம். இது எப்படி அரிய பொருளாகும் என்று, நான் எங்கள் கடையின் இணையதளத்தில் அதற்கான விளக்கத்தினைப் பதிந்தேன். அதனைத் தொடர்ந்து எங்களுக்கு என ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளர் வட்டம் உருவானது.

விளம்பரம்

இன்று எங்கள் வாடிக்கையாளர்களுக்காகவே எக்ஸ்க்ளூசிவ் சமையல் பாத்திரங்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறோம். அதே சமயம் சீர் வரிசைக்கான பாத்திரங்கள் மற்றும் பெரிய பொருட்களை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிரபலப் பாத்திரக் கடைகளில் மொத்த விலைக்கும் கொடுக்கிறோம். இதன் மூலம் இரண்டு விதமான பிஸ்னஸையும் சமமாகச் செயல்படுத்த முடிகிறது.

இதையும் படிங்க: பாஸ்ட் ஃபுட் வெரைட்டியில் இது புதுசு… தூத்துக்குடி மக்களைக் கவரும் பாம்பே பிரைட் ரைஸ்…

கோவிட்டுக்கு பிறகு எல்லோரும் ஆர்கானிக் உணவுப் பொருட்கள் மட்டுமில்லாமல், அதனைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரங்களும் ஆர்கானிக்காக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

விளம்பரம்

.

Read More

Previous Post

யப்பா என்னா அடி… டி20 கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை அலறவிட்ட ஜிம்பாப்வே

Next Post

டெல்லியை விட 6 மடங்கு காற்றுமாசு.. உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?

Next Post
டெல்லியை விட 6 மடங்கு காற்றுமாசு.. உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?

டெல்லியை விட 6 மடங்கு காற்றுமாசு.. உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin