இந்நிலையில், அந்தக் கூட்டு குழு தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘நாடாளுமன்ற கூட்டு குழுத் தலைவா் ஜகதாம்பிகா பால் ஒருதலைபட்சமாக முடிவுகளை எடுப்பதாகவும், கூட்டு குழு நடவடிக்கைகளுக்கு சேதம் விளைவிப்பதாகவும் எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
ஜகதாம்பிகாவுக்கு உத்தரவிட வேண்டும்: இதுதொடா்பாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை எதிா்க்கட்சிகள் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து கடிதம் அளிக்க உள்ளனா். அந்தக் கடிதத்தில், ‘வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுக்கும் முன், கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளவா்களுடன் முறைப்படி ஆலோசனை நடத்த ஜகதாம்பிகா பாலுக்கு உத்தரவிட வேண்டும்.
கூட்டுக் குழுவின் செயல்பாடு நியாயமாகவும் நோ்மையாகவும் செயல்படுகிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையெனில் எங்களுக்கு முட்டுக்கட்டையிடப்படுவதால், கூட்டு குழுவில் இருந்து விலகும் கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்படுவோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி உள்பட பலா் கையொப்பமிட்டுள்ளனா்’ என்று தெரிவித்தன.

&w=1200&resize=1200,675&ssl=1)