2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் வயநாடு தொகுதியில் இருந்து தனது எம்பி பதவியை ராஜினமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வயநாடு காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிடுகின்றன.
இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இவர் அங்கு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அதன்படி இன்றும் வயநாட்டில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்காக மோடி அரசு பிரிவினையையும், வெறுப்பையும் தூண்டுகிறது. என் சகோதரருக்கு எதிராக பிரச்சாரங்கள் கட்டவிழுத்து விடப்பட்டபோது, நீங்கள் (வயநாடு மக்கள்) தான் அவர் உண்மைக்காகவும் சரியானவைக்காகவும் போராடுகிறார் என்பதை புரிந்துகொண்டீர்கள்.
வயநாடு மருத்துவக் கல்லூரி மேம்பாட்டிற்காக ராகுல் காந்தி கடுமையாக போராடினார். இருந்தாலும், இன்னும் மேம்பாட்டிற்கான தேவை இருக்கிறது.
The relationship between leaders and the people should be like the one Rahul Gandhi ji has with you.
It should be based on honesty and loyalty, and it should be centered on fighting for what is right for you and your daily struggles.
: Congress General Secretary Smt.… pic.twitter.com/bCZcFNOtJO
— Congress (@INCIndia) November 3, 2024
ராகுல் காந்தி நமக்கு வழியை காண்பித்துள்ளார். அவர் உங்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புகிறார். ஆனால், அரசுகள் மக்களுக்கான அரசாக வேலை செய்யவில்லை; அதுவே பிரச்சனை தான்” என்று பேசினார்.
இதையும் படியுங்கள் :
சுற்றுலா பகுதியில் நடந்த பயங்கர தாக்குதல்! – சந்தேகத்தை எழுப்பும் ஃபரூக் அப்துல்லா
அதேபோல் பிரியங்காவிற்காக வாக்கு சேகரித்து பேசிய ராகுல் காந்தி, “வரும் காலத்தில் நாம் எதில் கவனம் செலுத்த இருக்கிறோம் என்பதற்கு பிரியங்கா ஏற்கனவே ஒரு பட்டியலை தயார் செய்துவைத்துள்ளார். இது அவர் ஏற்கனவே வயநாடு மக்கள் தொடர்பாக சிந்திக்க துவங்கிவிட்டார் என்பதை காட்டுகிறது.
Priyanka ji has already made a few lists: what will we focus on in the future; where will we fight for Wayanad’s demands; where will we strengthen Wayanad’s capabilities. This shows she has already started thinking and planning for Wayanad.
The main fight in the country today is… pic.twitter.com/OpEqZOhuRJ
— Congress (@INCIndia) November 3, 2024
இன்று தேசத்தின் உண்மையான போராட்டம் என்பது அரசியல் அமைப்புக்கானது. அரசியல் அமைப்பு சட்டம் கோபம், வெறுப்பு அல்லது ஆணவம் கொண்டு எழுதப்பட்டது அல்ல. அது பிரிடிஷாரிடம் இருந்து நம் நாட்டிற்கான விடுதலைக்காக போராடியவர்கள் எழுதியது. நல்லிணக்கத்திற்காக அவர்கள் அதனை வடிவமைத்துள்ளனர்” என்றி பேசினார்.
வயநாட்டில் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டபோது மழை பெய்தது. ஆனால், அப்போதும் அவர் கொட்டும் மழையில் பரப்புரை வாகனத்தில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)