• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

அமெரிக்க தேர்தல் எப்படி நடக்கும்? அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்களா?

GenevaTimes by GenevaTimes
November 4, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்க தேர்தல் எப்படி நடக்கும்? அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்களா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இவர்கள் இருவரில் யார் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்காவின் அடுத்த அதிபராவார் என எதிர்பார்ப்பு எழுந்துவரும் நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகிவருகின்றன. அதில் சில கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகவும், சில கருத்துக்கணிப்புகள் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாகவும் இருக்கிறது. அதேசமயம், இருவருக்கும் ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

விளம்பரம்

கருத்துக்கணிப்புகள் முடிவுகள், நவம்பர் 5ம் தேதி வாக்குப் பதிவு என அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாக இருந்துவரும் வேளையில், அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடைபெறும் என்பதை அறிந்துக்கொள்வோம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முறை:

அமெரிக்காவில் அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் “Electoral College” எனப்படும் செயல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

அமெரிக்காவின் மக்கள் தொகையைப் பொறுத்து ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பிரதிநிதிகள் வாக்குகள் இருக்கும். உதாரணமாக, கலிபோர்னியாவுக்கு 54 வாக்குகளும், டெக்சாஸ் மாகாணத்திற்கு 40 வாக்குகளும் உண்டு. 50 மாகாணங்கள் மற்றும் தலைநகரப் பகுதியான வாஷிங்டன் டி.சி.யை சேர்த்தால், மொத்தம் 538 Electoral College வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளர் அதிபராவார். வாக்காளர்கள் மாகாண அளவில் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். தேசிய அளவில் போட்டியிடும் வேட்பாளர்களை அல்ல.

இதையும் படியுங்கள் :
வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும் அதிசயம்! வெடிக்கும் நட்சத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் விஞ்ஞானிகள்

அதாவது, எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளைப் பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும். உதாரணமாக, டெக்சாஸில் ஒரு வேட்பாளர் 50.1% வாக்குகளைப் பெற்றால், அவருக்கு அம்மாகாணத்தின் 40 வாக்குகளும் வழங்கப்படும்.

அதனால்தான், கடந்த 2016-ஆம் ஆண்டு ஹிலாரி கிளிண்டன் தேசிய அளவில் டிரம்பை விட 30 லட்சம் வாக்குகளை கூடுதலாகப் பெற்ற போதிலும், எலக்டோரல் காலேஜ் வாக்குகளை குறைவாக பெற்றதால் தோல்வியைத் தழுவினார்.

விளம்பரம்

ஸ்விங் மாகாணங்கள்:

பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயக கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றுக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. எனவே, இழுபறி நிலவும் சில மாநிலங்களிலேயே கூடுதல் கவனம் உள்ளது. இந்த மாகாணங்கள் ‘swing states என அழைக்கப்படுகின்றன. இவையே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. இந்த ஆண்டு அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் மற்றும் வட கரோலினா ஆகியவை swing states-களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இம்மாகாணங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கமலா ஹாரிசும் டிரம்பும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

இதையும் படியுங்கள் :
தொழிற்சாலைகளை பாதுகாக்கும் ரோபோ நாய்கள்…அதிகளவு தயாரிக்கும் பணியில் ஈடுபட பிரபல நிறுவனம் முடிவு!

சம வாக்குகள் பெற்றால் என்ன நடக்கும்?

எலக்டோரல் வாக்குகளை இரண்டு வேட்பாளர்களும் சமமாக பெற்றால் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர்களும் வாக்களித்து அதிபரை தேர்வு செய்வர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் 1824-ஆம் ஆண்டு நான்கு அதிபர் வேட்பாளர்களான ஆண்ட்ரூ ஜாக்சன், ஜான் குயின்சி ஆடம்ஸ், ஹென்றி க்ளே மற்றும் வில்லியம் க்ராஃபோர்ட் ஆகியோர் சம வாக்குகளைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஜான் குயின்சி ஆடம்ஸ் அதிக ஆதரவு பெற்று அதிபரானார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

வெளிநாடுகளில் வசிப்போர் இந்திய உறவுகளுக்கு உணவு ஆர்டர் செய்யலாம்! – ஸ்விக்கி அறிமுகம் | people living abroad order food for loved ones in India Swiggy feature

Next Post

பிரதமரின் உத்தியோகபூர்வ பயணங்களுக்கு அக்டோபர் மாத நிலவரப்படி RM13.7 மில்லியன் செலவு – நாடாளுமன்றத்தில் தகவல் | Makkal Osai

Next Post
பிரதமரின் உத்தியோகபூர்வ பயணங்களுக்கு அக்டோபர் மாத நிலவரப்படி RM13.7 மில்லியன் செலவு – நாடாளுமன்றத்தில் தகவல் | Makkal Osai

பிரதமரின் உத்தியோகபூர்வ பயணங்களுக்கு அக்டோபர் மாத நிலவரப்படி RM13.7 மில்லியன் செலவு - நாடாளுமன்றத்தில் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin