தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் விளைச்சல் ஆகும் வாழைத்தார், வாழை இலை போன்றவை தூத்துக்குடி மார்க்கெட்டிற்கு ஏலத்திற்காகக் கொண்டுவரப்படுகிறது.
தூத்துக்குடி மார்க்கெட்டில் தினமும் காலை 9 மணி அளவில் வாழைத்தார் ஏலம் மற்றும் வாழை இலை ஏலம் நடைபெறுகிறது. நாளை (அக்.31) தீபாவளி என்பதால் வாழை இலை விலை உயர்ந்து காணப்படுகிறது. பொதுவாகவே சுப தினங்களில் வாழை இலையின் விலை உயர்ந்து காணப்படும். அதிலும் பெரிய வாழை இலைக்கட்டு தான் அதிகமாக விலை உயர்ந்து காணப்படும்.
ஆனால் தற்போது பெரிய வாழை இலைக்கட்டை விட சிறிய இலைக்கட்டு தான் அதிக விலைக்கு விற்பனை ஆகின்றது. ஏனென்றால் தீபாவளியின் போது வீட்டில் படையல் போட்டு பூஜை செய்வதற்கு இலைகள் அதிகமாக வாங்கப்படுகின்றது. மேலும், விருந்திற்காகவும் வாழை இலை அதிகமாக வாங்கப்படுகிறது.
இதையும் படிங்க: TNSTC Recruitment: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2,877 காலிப்பணியிடங்கள்… பணியிடம் குறித்த முழு விபரம்…
பொதுவாகவே பெரிய வாழை இலைக்கட்டு ஹோட்டலுக்கே வாங்கி செல்வார்கள். ஆனால் நாளை அனைத்து உணவகமும் அடைப்பு என்பதால் பெரிய கட்டை விட சிறிய கட்டு விலை தான் அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது ஒரு கட்டு விலை ரூபாய் 1000 வரை விற்பனையாகின்றது. பெரிய கட்டு வாழையிலை 800 ரூபாய் வரையும், சிறிய கட்டு வாழை இலை 1000 ரூபாய் வரை விற்பனையாகின்றது. விலை குறைவாக இருந்தாலும் விற்பனை அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து வாழை இலை கமிஷன் மண்டி ராஜாசிங் கூறுகையில், “தூத்துக்குடி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வாழை இலை இங்கே ஏலத்திற்குக் கொண்டுவரப்படுகிறது. பழையகாயல், புதுக்கோட்டை, ஏரல் போன்ற பல கிராமங்களிலிருந்து இங்கு விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.
தினமும் காலை இங்கு வாழை இலைகள் ஏலத்திற்குக் கொண்டுவரப்படும். தீபாவளிக்கு சாமிக்குப் படையல் வைப்பதற்கும், வீட்டில் விருந்து வைப்பதற்கும் சிறிய இலைக் கட்டுகளை அதிகமானோர் வாங்கிச் செல்கின்றனர். அதனால் சிறிய வாழை இலைக்கட்டின் விலை அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது பெரிய கட்டு ரூபாய் 800 வரையிலும், சிறிய கட்டு 1000 ரூபாய் வரைக்கும் விற்பனையாகின்றது. நாளை இந்த விலை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)