
அஸ்வெசும நலன்புரி உதவிகள் வழங்கும் பயனாளிகளை தெரிவு செய்வதில் அநீதி இழைக்கப்பட்ட பயனாளிகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பௌத்தம், மதம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவில் 10 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

